Tuesday 20 January 2015

இந்தியாவில் கடந்த மூன்று வருடங்களில் புலிகள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த மூன்று வருடங்களில் புலிகள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது 2,226 புலிகள் உள்ளது. 

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் வெளியிட்ட புதிய புலிகளின் கணக்கெடுப்பின் படி, உலகில் 70 சதவீதம் புலிகள் எண்ணிக்கையை இந்தியா கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது. கடந்த மூன்று வருடங்களில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "உலகில் புலிகள் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இது பெருமையான செய்தியாகும்." என்று பிரகாஷ் ஜவதேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில் 1,706 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதுவே கடந்த 2014ம் ஆண்டில் 2,226 ஆக உயர்ந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய கணக்கெடுப்பில், 80 சதவீதம் புலிகளின் தனி புகைப்படமும் நம்மிடம் உள்ளது என்று  பிரகாஷ் ஜவதேகர் கூறியுள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியாவில் 1,411 புலிகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. தற்போதையை எண்ணிக்கையில் இந்தியா புலிகள் எண்ணிக்கையில் தனிசிறப்பை பெற்றுள்ளது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் மூலம் இந்தியாவில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியாவில் 1,706 புலிகள் உள்ளது என்று மதிப்பிடப்பட்டது. (குறைந்தது 1,571 முதல் அதிகமாக 1,875 வரையில்) கணக்கெடுப்பில் 17 மாநிலங்களில் உள்ள புலிகள் எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின்படி, அதிக எண்ணிக்கையிலான புலிகளை கொண்ட மாநிலமாக கர்நாடகம் உள்ளது. புலிகள் 1.5 முதல் அதற்கு அதிகமான வயதினை கொண்டது. கர்நாடகாவில் 408 புலிகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு அடுத்தப்படியாக உத்தரகாண்டில் 340 புலிகளும், மத்திய பிரதேசத்தில் 308 புலிகளும், தமிழ் நாட்டில் 229 புலிகளும், மராட்டியத்தில் 190 புலிகளும், அசாமில் 167 புலிகளும், கேரளாவில் 136 புலிகளும், உத்தரபிரதேசத்தில் 117 புலிகளும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive