Monday 19 January 2015

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு, சசிதரூரிடம் 48 மணி நேரங்களில் விசாரணை - டெல்லி போலீஸ்

புதுடெல்லி, 

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக அவருடைய கணவர் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரிடம் போலீசார் நாளை அல்லது அதற்கு மறுநாள் விசாரணை நடத்தலாம் என்று டெல்லி போலீஸ் கமிஷ்னர் பாசி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் வழக்கை மாற்றி பதிவு செய்து உள்ளனர். இது குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சசிதரூர் வீட்டு வேலைக்காரர்களிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்தப்பட்டது. தரூரும், சுனந்தாவும் சண்டை போட்ட ஏர் இந்தியா விமானத்தின் ஊழியர்களிடம் டெல்லி போலீசார் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். அடுத்த கட்டமாக சசிதரூரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தற்போது, சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரிடம் போலீசார் நாளை அல்லது அதற்கு மறுநாள் விசாரணை நடத்தலாம் என்று டெல்லி போலீஸ் கமிஷ்னர் பாசி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் உண்மை வெளிவர, தொடர்புடையவர்கள் அனைவரிடமும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து விட்டனர். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "இதுவரையில் சசிதரூரிடம் விசாரணை நடத்தப்படவில்லை, விரைவில் விசாரணை நடத்துவோம், அவர் தற்போது நகரைவிட்டு வெளியே உள்ளார். அவர் இன்று மாலை திரும்புவார். இன்று மாலை 7 மணி அளவில் வருகிறார். அவரிடம் நாளை அல்லது நாளை மறுநாள் நாங்கள் பேசலாம்," என்று பாசி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி, சுனந்தா புஷ்கர் மற்றும் சசிதரூர் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்றவிமானத்தில் பயணம் செய்த முன்னாள் தகவல் தொடர்புத் துறை மந்திரி மணிஷ் திவாரிடம் விசாரிக்கப்படுமா என்ற கேள்விக்கு, அதற்கான வாய்ப்பை மறுக்காத வண்ணம் பதிலளித்தார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive