Monday 19 January 2015

பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவம் ஏவுகணை வீச்சு, 6 தீவிரவாதிகள் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமெரிக்க ராணுவம் ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் உயிரிழந்தனர் என்று பாதுகாப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதி தீவிரவாதிகளின் புகழிடமாக திகழ்கிறது. தலிபான் மற்றும் அல்-கொய்தா தீவிரவாதத்துடன் தொடர்புடைய மற்ற தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதத்தில் இருந்து இப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனுடன் அமெரிக்க ராணுவமும் அவ்வபோது தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. 

அமெரிக்க ராணுவம் ஷாகி கேல் பகுதியில் தீவிரவாதிங்கள் பதுங்குமிடங்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். தீவிரவாதிகள் அனைவரும், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து, தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் சுமார் 1,700 வரையிலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பழங்குடியின பகுதியில் அமெரிக்க ராணுவம் கடந்த 10 ஆண்டுகளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இது நாட்டின் இறையாண்மையை மீறுவதாகவும் என்று பாகிஸ்தான் கூறிவருகிறது. ஆனால் அமெரிக்கா தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive