Monday 19 January 2015

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே லக்‌ஷ்மண் கவலைக்கிடம்

புனே,

பிரபல கார்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண், உடல் நலக் குறைவு காரணமாக புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

94 வயதான லக்‌ஷ்மண் சிறுநீரக தொற்று காரணமாக கடந்த சனிக்கிழமை மாலை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். லஷ்மணனின் பல முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல்வாதிகள் குறித்து கேலிச்சித்திரங்கள் வரைந்து சமூகத்தின் பிரதிபலிப்பாக திகழ்ந்தவர் ஆர்.கே லக்‌ஷ்மண் இருப்பினும் அவர் பிற்பகுதியில் கார்டூன்கள் வரைவதை அவர் நிறுத்தி விட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive