Sunday 18 January 2015

ரெயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை மத்திய மந்திரி அருண்ஜெட்லி உறுதி

புதுடெல்லி, 
ரெயில்வே துறை அல்லது நிலக்கரி சுரங்கத்தை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார்.
சந்திப்பு
டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை 11 தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து சில கோரிக்கைகள் வைத்தனர். அப்போது அவர்களிடம் அருண்ஜெட்லி கூறியதாவது:–
அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவது, பணி பாதுகாப்பு வழங்குவது, ஒவ்வொரு தனி மனிதன் மற்றும் அமைப்பு, அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதே மத்திய அரசின் நோக்கமாகும். முக்கியமாக தொழிலாளர்கள் நலனுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளிக்கும்.
இதற்காக பயிற்சி பணியாளர்களுக்கான சட்டம்–1961 திருத்தம் செய்யப்பட்டது. தொழிலாளர் நலதிட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் ஒருங்கிணைக்கப்படும். தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கு சாதகமான சூழலும் உருவாக்கப்படும். ரெயில்வே துறையையோ அல்லது நிலக்கரி சுரங்கத்தையோ தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்ப்பு
மத்திய மந்திரியுடனான சந்திப்புக்குப்பின் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் டி.எல்.சச்தேவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘நிலக்கரி சுரங்கம் தொடர்பான அவசர சட்டத்திற்கு மந்திரியிடம் எங்களின் எதிர்ப்பை தெரிவித்தோம். அதேபோல நில ஆர்ஜித சட்ட திருத்தத்தையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினோம். அன்னிய நேரடி முதலீட்டு திட்டத்திற்கும் எதிர்ப்பை காட்டியுள்ளோம்’ என்றார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive