Monday 19 January 2015

குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் சேதம் அடையாதவகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தனி காரில் வருகிறார் ஒபாமா

புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தலைநகர் டெல்லியில் 26-ந் தேதி நடைபெறுகிற குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் மனைவி மிச்செல், உயர் மட்ட தூதுக்குழுவினருடன் 25-ந் தேதி தனி விமானம் மூலம் டெல்லி வந்து சேருகிறார்.ஒபாமாவின் வருகையையொட்டி டெல்லியில் குடியரசு தின விழாவுக்கு வரலாறு கண்டிராத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக குடியரசு தின விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள தலைமை விருந்தினர், ஜனாதிபதியுடன் அவரது குண்டு துளைக்காத காரில் வருவது வழக்கம். ஆனால் ஒபாமா, தனியாக தனது காரில் வந்து சேருவார் என தகவல்கள் கூறுகின்றன.

*ஒபாமா பயணம் செய்ய குண்டு துளைக்காத கார் வரவழைக்கப்படுகிறது. இந்த காரின் டயர், டீசல் டேங்க் போன்றவையும் துப்பாக்கியால் சுட முடியாத அளவுக்கு பாதுகாப்பு கவசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒபாமா காரில் இருந்தபடியே தனது அலுவலகத்துடன் தொடர்பில் இருக்க முடியும். 

*தீ பீஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த கார் 18 அடி நீளமும் 8 டன்கள் எடையும் கொண்டது. எட்டு அங்குல தடிமனுடன் இந்த கார் அமைந்துள்ளது. இந்த காரின் எடை போயிங் 757 விமானத்தை விட அதிக எடை கொண்டது என்று கூறப்படுகிறது. 

*பஞ்சர் ஆகாத வகையில் இந்த காரின் டயர்கள் வடிவைமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆகஸிஜன் டாங்கிகளும் தீயணைப்பு கருவிகளும் உள்ளன. மேலும் இரவையும் துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் கேமிரா அமைக்கப்பட்டுள்ளது. 

* அமெரிக்காவின் இரகசிய சேவையில் பயிற்சி பெற்ற நபர்தான் இந்த காரை இயக்குவார். அதிவேகமாக ஓட்டுவதுடன் 180 டிகிரி கோணத்தில் காரை திருப்பும் பயிற்சியும் இவர் பெற்றிருப்பார். 

*எந்த பகுதியில் இருந்தாலும் காரில் இருந்த படியே ஒபாமாவால் தனது அலுவலத்துடன் தொடர்பில் இருக்க முடியும். சேட்டிலைட் போன் வசதியுடன் கூடிய இந்த கார் பெண்டகன் மற்றும் துணை ஜனாதிபதியுடனுன் நேரடி இணைப்பில் இருக்கும்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive