Tuesday 20 January 2015

பொது விவாதத்திற்கு வர, கிரண் பேடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்

புதுடெல்லி,

பாரதீய ஜனதா முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண் பேடியை, அரவிந்த் கெஜ்ரிவால் பொது விவாதத்திற்கு வர சவால் விடுத்துள்ளார். 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதிலளித்துள்ள கிரண் பேடி, சபையில் அவருடன் விவாதம் நடத்துவேன் என்று கூறியுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7–ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் முதல்–மந்திரி வேட்பாளராக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் களம் காண்கிறார். டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் முதல்–மந்திரி பதவி வேட்பாளராக கிரண் பேடி நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் தன்னுடன் பொது விவாதம் நடத்த தயாரா என்று கிரண் பேடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். 

பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக எங்களுக்கு இடையே விவாதம் நடந்தால், ஜனநாயகத்திற்கு இதுஒரு நல்ல முன்முயற்சியாக இருக்கும். மக்கள் மதம் மற்றும் சாதியின் பெயரில் வாக்களிக்கின்றனர்..... அவர்கள் பிரச்சனைகளை தெரிந்திருக்க மாட்டார்கள். நிலையான பிரச்சனைகள் தொடர்பாக விவாதம் சுமார் 1-2 மணிநேரம் நீடிக்கும். என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கூறியுள்ளார். 

கெஜ்ரிவாலின் சவாலுக்கு பதில் அளித்துள்ள கிரண் பேடி, என்னுடைய முழு கவனமும் நல்ல சேவையை வழங்குவதில் உள்ளநிலையில், ஆம் ஆத்மியின் தலைவர் விவாதத்தை மட்டுமே நம்புகிறார். எனவே நான் அவருடன் சட்டசபையில் விவாதம் நடத்துவேன். என்று கூறினார். 

இதற்கிடையே கிரண் பேடி தன்னுடைய சமூக வலைதளத்தில் தன்னை 'பிளாக்' செய்யக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண் பேடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது டூவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் வெளியிட்டுள்ள டூவிட்டர் செய்தியில், கிரண் பேடிஜி நான் உங்களுடைய வலைதளத்தை(டூவிட்டர்) பின்தொடர்ந்து வருகிறேன். நீங்கள் தற்போது என்னை டூவிட்டரில் 'பிளாக்' செய்துள்ளீர்கள். தயவுசெய்து 'அன்பிளாக்'(பின்பற்றவிடுங்கள்) செய்யுங்கள். என்று குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு பதில் அளித்துள்ள கிரண் பேடி, தன்னை ஒரு அராஜகவாதி என்று அழைத்துக் கொண்டபின்னர் அவரை (அரவிந்த் கெஜ்ரிவாலை) 15 மாதங்களுக்கு முன்னதாகவே பிளாக் செய்துவிட்டேன். எதிர்மறையானவற்றை அரவிந்த் கெஜ்ரிவால் பரப்பினார். என்னுடைய டூவிட்டரை பின்பற்றும் 4 மில்லியன் ஆதரவாளர்கள் எதிர்மறையை பார்க்க விரும்பவில்லை. இது டூவிட்டர் கணக்கை மாசுபடுத்துவதாக இருந்தது. என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive