Monday 19 January 2015

மெக்டொனால்ட்ஸ் சர்ச்சை: ஏழைகளுக்கு நல்லநாட்கள் எப்போது வரும்: சிவசேனா கேள்வி

மும்பை,

புனேவில் உள்ள மெக்டோனால்ஸ் உணவு விடுதியில் இருந்து தெருவோர குழந்தை வெளியேற்றப்பட்டதாக எழுந்த சர்ச்சைகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா ஏழைமக்களுக்கு ”நல்ல நாட்கள்” எப்போது வரும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 10 ஆம் தேதி ஷாஹீனா அட்டர்வாலா என்ற பெண்மணி ஆதரவற்ற குழந்தை ஒன்றிற்கு, குடிக்க பானங்கள் வாங்கிக் கொடுப்பதற்காக மெக்டோல்டு உணவகத்திற்குள் அழைத்து சென்றார்.  அப்போது அந்நிறுவனத்தின் காவலாளி ”இந்த வகையான மக்களுக்கு இங்கு அனுமதியில்லை” என்று சொல்லி அக்குழந்தையை  உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். இந்த சம்பவத்தைப் பற்றி சமூக வலைதளத்தில்  ஷாஹினா அட்டார்வாலா  எழுதினார். 

இதனால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது மட்டுமின்றி, ’மெக் டொனல்ட்ஸ்’ மீது கடும் கண்டனங்களையும் உருவாக்கியது.இதையடுத்து சம்பவம் தொடர்பாக கவாலாளியை சஸ்பெண்ட் செய்த மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில்,மேற்கண்ட சம்பவம் குறித்து சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சம்னாவின் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:- ”இந்த சம்பவம்(மெக்டொனால்ட்ஸ்) நாட்டில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள இடைவெளியை தெளிவாக காட்டுகிறது. இது போன்ற சம்பவங்களுக்கு தொடர்ந்து விவதாங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் வெறும் விவாதங்களால் மட்டும் இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியாது. 

ஏழைக்குழந்தைகள் பாலத்தின் அடியிலும், சிக்னல்கள் அருகிலும் ரயில்வே நிலையங்களிலும் உணவக விடுதி வாசல்களிலும் தங்களது வயிற்றில் கைகளை வைத்தவாறு நிற்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இக்குழந்தைகளுக்கு என்ன நடக்கபோகிறது. உண்மையாகவே இவர்களுக்கு எப்போது நல்லநாட்கள் வரும் என்று பாரதீய ஜனதாவின் தேர்தல் முழக்கத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளது. 

மேலும்,  இந்த சம்பவம் சமூகத்தில் இருதரப்புக்கு இடையே உள்ள வேறுபாட்டை பிளவுபடுத்தி காட்டுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive