Tuesday 20 January 2015

'என்னை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்' ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்த இங்கிலாந்து இளம்பெண் கோரிக்கை

'என்னை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்' என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து உயிர்பிழைத்த இங்கிலாந்து பெண் தனது தந்தையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இங்கிலாந்தை சேர்ந்த தாரீனா ஷாகில் (வயது 25) என்ற இளம்பெண் தனது 17 மாத குழந்தையுடன் கடந்த அக்டோபர் மாதம் சிரியாவிற்கு சென்றார். லண்டனில் உள்ள தனது உறவினர்களிடம் விடுமுறை நாட்களை கொண்டாட ஸ்பெயின் செல்வதாக பொய் சொல்லிவிட்டு சிரியா சென்றுள்ளார் என்று இங்கிலாந்தை சேர்ந்த தி சன் செய்தி வெளியிட்டுள்ளது. உளவியல் பட்டதாரியான ஷாகில் செய்தியாளரிடம் பேசுகையில், என்னுடைய கணவருடன், குடும்பத்தில் பிரச்சினையை அடுத்து, ஒருநல்ல சமூகத்தில் எனது குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற வாய்ப்புக்காக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள பகுதியில் வசிக்க முடிவு செய்தேன். தற்போது ரக்காவில் மோசமான நிலையே உள்ளது. என்று கூறியுள்ளார். 

இங்கு உயிர்வாழ்வது என்பது மிகவும் கடிணமானது. இங்கு ஹாட் வாட்டர் கிடைப்பது இல்லை, மின்சாரம் கிடைப்பது இல்லை, நாங்கள் பிரிட்டனில் பயன்படுத்திய எந்தஒரு வசதியும் இங்கு கிடைக்கவில்லை. இங்கு தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக வீசப்படும் குண்டுகளால் என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது. ஒருநாள் இரவு இங்கு சுமார் 30 குண்டுகள் வெடித்தது. அடுத்தநாள் காலையில் நான் வெளியே சென்றபோது எங்கும், இரத்தம் படிந்த உடல்கள் சிதறி கிடந்தது. இது மிகவும் பயங்கரமானது. 

இதனையடுத்து தீவிரவாதிகள் என்னை ஒரு காலை மட்டும் கொண்ட தீவிரவாதிக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி செய்தனர். உடனடியாக நான் துருக்கி எல்லையின் வழியாக தப்பித்துவிட்டேன். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் சோதனைச் சாவடியின் வழியே ஏமாற்றிவந்துவிட்டேன். என்று ஷாகில் கூறியுள்ளார். 

ஷாகில் மற்றும் அவருடைய குழந்தை தற்போது துருக்கியில் உள்ள தடுப்பு முகாமில் உள்ளனர். கடந்த ஞாயிறு அன்று தனது தந்தையிடம் பேசிய ஷாகில், என்னை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் அப்பா. அப்பா தயவு செய்து என்னை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள். இங்கிருந்து என்னை உடனடியாக அழைத்து செல்லுங்கள். என்று கதறி அழுதுள்ளார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive