Tuesday 20 January 2015

ஹாக்கி இந்தியா லீக்'-ல் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும்: கேப்டன் சர்தார்சிங் விருப்பம்

புதுடெல்லி,

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஹாக்கி இந்தியா லீக் (HIL) போட்டியில் ஒன்பது பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், சில அரசியல் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அவர்கள் நாட்டை வி்ட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று முதல் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நிலவி வரும் அரசியல் பதற்றம் காரணமாக அவர்கள் ஹாக்கி இந்தியா லீக்கில் இடம் பெறவே இல்லை. இதுதவிர, சென்ற மாதம் புவனேஸ்வரில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடுவதாக சட்டையை கழற்றி பார்வையாளர்களை நோக்கி சர்ச்சைக்குரிய சைகைகளை காண்பித்து ஒழுங்கீனமாக பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்டதும் அவப்பெயரை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இந்திய ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் மற்றும் முன்னாள் ஸ்கிப்பர் அஜித் பால் சிங் ஆகியோர் ஹெச்.ஐ.எல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். அவ்வாறு அனுமதி அளிப்பது இந்திய அரசின் உத்தரவுக்குட்பட்டதாகும். இந்த விவகாரம் நிர்வாக ரீதியான பிரச்சனையாகவும் பார்க்கப்படுகிறது. 

இதுபற்றி கேப்டன் சர்தார் சிங் கூறுகையி்ல்,'பாகிஸ்தான் அணியிலும் நல்ல திறமையான ஹாக்கி வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஹெச்.ஐ.எல். போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இந்த லீக்கில் நல்ல விளையாட்டு வீரர்கள் இடம் பெற வேண்டும். ஆனால், சூழ்நிலை என்ன என்று எனக்கு புரிகிறது. அரசின் நிலைப்பாட்டையும் நாம் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.' என்றார். 

அதேபோல், முன்னாள் ஸ்கிப்பர் அஜித் பால் கூறுகையில், 'சர்தாரின் செண்டிமென்டை நான் வரவேற்கிறேன். இந்திய ஹாக்கியை சர்வதேச அளவில் முன்னெடுத்துச் செல்ல இருநாடுகளும் விளையாட வேண்டியது அவசியம். என்னை பொறுத்தவரையில் ஒரு ஸ்போர்ட்ஸ்மேனாக பாகிஸ்தான் வீரர்களை இங்கு விளையாட அனுமதிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.'என்றார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive