மூன்று நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய வருதையையொட்டி அனைத்துவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா வருகிறார். அன்று முதல் மூன்று நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒபாமா, தாஜ்மகால் உள்ளிட்டவைகளை பார்வையிடுகிறார்.ஒபாமா வருகையொட்டி டெல்லி முழுவதும் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பாதையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு ரேடார் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு விமானங்கள் கண்காணிக்கப்படுகின்றன. டெல்லி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒபாமா வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். கேள்விக்கு பதிலளிக்கையில், “அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எந்த ஒருஇடத்திலும் பாதுகாப்பில் பிரச்சினை இருக்காது” என்று தெரிவித்தார். உள்துறை அமைச்சகத்தின் கட்டுபாட்டின் கீழ் வரும் எல்லைபாதுகாப்பு படையும் ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளது. ஒபாமா வருகையையொட்டி கூடுதலாக 1200 எல்லை பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment