Thursday, 22 January 2015

கிரண் பேடி முதல்-மந்திரியாக தேர்வு செய்யபட்டால் மகிழ்ச்சி அடைவேன் சாந்தி பூஷண்

புதுடெல்லிக்கு வரும் பிப்ரவரி மாதம் 7தேதி நடைபெற இருக்கிறது. இதனால் டெல்லியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சாந்தி பூஷண் பா.ஜ.க.சார்பில் போட்டியிடும் கிரண் பேடி டெல்லியின் முதல் மந்திரியாக தேர்தெடுக்கப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார்.

இது குறித்து  அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க.முதல்-மந்திரி வேட்பாளராக போட்டியிடும் கிரண்பேடிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊழலுக்கு எதிராக போராடிய வரும், அன்னா ஹசாரேவின் சீடருமான கிரண் பேடி டெல்லி முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கபட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

கிரண் பேடி முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கபட்டால் அவர் தூய்மையான திறமையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்க வேண்டும்.

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினரும், பா.ஜ.க.வின் முதல்-மந்திரி வேட்பாளருமான கிரண்பேடி புதுடெல்லியின் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் இவ்வாறு சாந்தி பூஷண் கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive