இவ்விழாவிற்கு முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால் அழைக்கப்படவில்லை
இந்த விழாவுக்கு ஏன் மத்திய அரசு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நான் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு அழைப்பு விடுக்கபடவில்லை.இது ஏன் என்று தெரியவில்லை.எனக்கு அழைப்பு விடுக்கபடாததன் காரணம் குறித்து எனக்கு ஏதும் தெரியவில்லை.
என்று கூறினார்.
இது குறித்து பா.ஜ.க.செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ் கூறுகையில்:
குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள யார் யார் அழைக்கபட வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்யும் அதன் அடிப்படையில் தான் அழைப்புதழ்களை பாதுகாப்புத்துறை அமைச்சகம் அனுப்பி வருகிறது.
முன்னாள் முதல் மந்திரிகளை அழைப்பதற்கு நெறிமுறைகள் இல்லை. அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்பினால் அவர்கள் சிறப்பு அழைபிதழ்களை கேட்டு பெறலாம். ஆனால் மீண்டும் நான் சொல்கிறேன். முன்னாள் முதல்வர்களை அழைப்பதற்கு நெறிமுறைகள் இல்லை என்று கூறினார்.
0 comments:
Post a Comment