முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பாரதீய ஜனதா கட்சியில் சேரவுள்ளார் என்ற தகவலில் உண்மை இல்லை என்று பாரதீய ஜனதா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சவுரவ் கங்குலி குறித்து வெளியான ஊகங்களை மறுத்த பாரதீய ஜனதா இதில் எந்த உண்மையும் இல்லை என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலர் சித்தார்த் நாத் சிங் கூறுகையில், சவுரவ் கங்குலி இணையவுள்ளார் என்று தொழிலதிபர் டிவிட்டரில் தெரிவித்து இருந்ததில் எந்த உண்மையும் இல்லை. இருப்பினும் முன்னாள் கேப்டன் கங்குலி மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். எங்கள் கட்சியின் சில தலைவர்கள் அவருடன் நல்ல நட்புறவை பேணுகின்றனர்” என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, தூய்மை இந்தியா திட்டத்தில் கங்குலி உட்பட சில பிரபலங்களை நியமித்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.
0 comments:
Post a Comment