இங்கிலாந்தை சேர்ந்தவர் ஹன்னா விண்டர்போர்ன் (வயது27). நியூ கேஸ்டில் பலகலைக்கழகத்தில் எலகட்ரானிக் என் ஜினீயரிங் படித்து உள்ளார். தனது 15 வது வயதில் கல்லூரியின் ஆயுதபடை பிரிவில் சேர்ந்தார். பின்னர் அவர் படிப்படியாக ராணுவத்தில் உயர் பதவிகளை அடைந்தார்.
ஆணாகப் பிறந்த இவர், பூப்படையும் காலகட்டத்தில் தன்னை பெண்ணாக உணரத் தொடங்கிவிட்டார். ஆனால் ராணுவத்தில் இருந்ததால் தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரிடமும் ஆணாக நடித்து கொண்டு இருந்தார். கடைசியாக அவர் ஆப்கானிஸ்தான் பாஸ்டியன் ராணுவ முகாமில் வேலையில் இருந்தார் அப்போது தன்னை முழுமையான பெண்ணாக காட்டி கொள்ள விரும்பினார். அதற்காக அவர் பாலியல் மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த பொய்யான வாழ்க்கை வாழ வேண்டாம் என்று முடிவு செய்தத அவர் பெண்ணாக மாறி ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.
இதற்கு அவரது பெற்றோர்களின் ஆதரவும் கிடைத்தது. இதனால் நம்பிக்கையோடு தனது புதிய வாழ்க்கைக்கான பயணத்தை தொடங்கினார். தற்போது சிகிச்சை முடிந்து முழுமையான பெண்ணாக உருமாறியுள்ள ஹன்னா, இங்கிலாந்தின் வடக்கு யார்க்ஷைர் கவுண்டியில் உள்ள கேட்டரிக் கேரிசன் நகரில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஹன்னா விண்டர்போர்ன்
நான் ஆப்கானிஸ்தானில் இருக்கும் போது நான் ஒரு போலியான வாழ்க்கை நடத்தி வந்தேன். என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரிடமும் நான் நடிக்க வேண்டியாதாக இருந்தது.என்னால் நடிப்பதை விட்டு வெளியே வரமுடியவில்லை. உலகம் எப்படி எடுத்துகொள்ளும் என எனக்கு தெரியாது. ஆனால் இப்போது எந்த பயமும் என்னிடம் இல்லை.
0 comments:
Post a Comment