ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டத்தில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 3 பெண்கள் பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
இங்குள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் இன்று வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்பறைக்கு சென்றார். சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிவதை கவனிக்காத அவர் தீக்குச்சியை பொருத்தியதும், பகீர் என்று பற்றிய தீயின் வெப்பத்தால் கியாஸ் சிலிண்டர் வெடித்து உயரப்பறந்தது.
வெடித்த சிலிண்டர் வீட்டின் மேற்கூரை மீது மோதிய வேகத்தில் மேல்தளம் இடிந்து கீழே விழுந்தது. வீட்டில் பற்றிய தீ மற்றும் இடிபாடுகளில் சிக்கி ரமணம்மா(80), ரமணா(56), நிர்மலாம்மா(48) ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 6 பேர் விஜயவாடா அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment