டெல்லி முதல் மந்திரி வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி சட்டசபை தொகுதியில் இன்று வேட்பு மனுவினை தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக சென்றார்.
அப்போது, வாகனத்தில் நின்றபடியே சாலையோர பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘வதந்திகளை பரப்பி, பொய் சொல்லும் இயந்திரமாக பா.ஜ.க. மாறிவிட்டது. ஆம் ஆத்மி கட்சி நடத்திய 49 நாள் நல்லாட்சியை ஐந்தாண்டு நல்லாட்சியாக மாற்றும் வகையில் எங்களுக்கு தனிப்பெரும் மெஜாரிட்டியை வழங்கி டெல்லி வாக்காளர்கள் புதிய வரலாற்றினை படைக்க உள்ளனர்’ என்று கூறினார்.
0 comments:
Post a Comment