Sunday 1 February 2015

கிரண் பேடி டெல்லியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, கிரண் பேடி டெல்லியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார் என்று கூறினார்.

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரம் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்தார். கிரண் பேடியை பாராட்டிய பிரதமர் மோடி, டெல்லிக்கு நிலையான அரசு தேவைப்படுகிறது. அரசாங்கத்தை நடத்துவதில் அனுபவம் உள்ள மக்கள், டெல்லிக்கு தேவைப்படுகிறார்கள். கிரண் பேடிக்கு நிர்வாக அனுபவம் இருக்கிறது. மக்களுக்காக பாடுபட வேண்டும் என்ற வலுவான நோக்கங்கள் கொண்ட பெண் அவர். டெல்லி வரலாற்றில் கிரண் பேடி பங்கு கொண்டவர். சிட்டியில் உள்ள ஒவ்வொரு தெருவும் அவருக்கு தெரியும். 'கிரண் பேடி டெல்லியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார்' என்று கூறினார். 

சுமார் 1 1/2 மணி நேரத்திற்கு மேலாக பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் பாரதீய ஜனதாவுக்கு முக்கிய எச்சரிக்கையாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலையே கடுமையாக விமர்சித்து பேசினார். கடந்த 2013–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது கனவுகளுடன் வாக்களித்தீர்கள். ஆனால் அந்த கட்சி (ஆம் ஆத்மி கட்சி), உங்களுக்கு துரோகம் செய்து விட்டது. முதுகில் குத்தி விட்டது. உங்கள் கனவுகளை முறித்துப் போட்டார்கள். ஸ்திரமற்ற நிலைக்கு உங்களை தள்ளினார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, அவர்களை தண்டித்து, டெல்லியில் உள்ள 7 இடங்களையும் பாரதீய ஜனதாவுக்கு தந்தீர்கள். மக்கள் தொடர்ந்து தவறை செய்ய மாட்டார்கள். டெல்லியில் பாரதீய ஜனதாவுக்கு முழுப்பெரும்பான்மை தாருங்கள். நான் தோளோடு தோள் நின்று உழைக்கக் கூடியவர்களை, நீங்கள் தேர்ந்தெடுங்கள். என்று பிரதமர் மோடி கூறினார். 

துருக்கியில் இருந்து திரும்பிய இந்தியர்களிடம் ஐ.எஸ். தீவிரவாத தொடர்பு குறித்து விசாரணை

பெங்களூரு,

துருக்கியில் இருந்து இந்தியா திரும்பியவர்களிடம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரில் இருந்து சிரியாவிற்கு செல்ல முயற்சித்த 9 பேர் துருக்கி நாட்டு எல்லையில், எல்லையை கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர். அவர்கள் துருக்கி நாட்டு அதிகாரிகளால் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பட்டனர்.  பெங்களூர் வந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்பதை உறுதிசெய்ய அவர்களிடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துருக்கியில் எல்லையை கடக்க முயன்ற 9 பேர்களில் ஒரு பெண்ணும், 5 குழந்தைகளும் அடங்கும். 

முதல்கட்ட விசாரணையில் 3 பேர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்தனர் என்பது தெரியவந்ததுள்ளது. அவர்களில் ஒருவர் அமெரிக்காவில் படித்துவிட்டு அங்கேயே வேலை செய்பவர் என்றும் தெரியவந்துள்ளது. 9 பேரும் சுற்றுலா விசாவில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி இஸ்தான்புல் நகருக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் துருக்கி அதிகாரிகளால் கடந்த ஜனவரி 30-ம் தேதி இந்தியாவிற்கு திரும்பி அனுப்பட்டனர். அவர்கள் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியதும், போலீஸ் அதிகரிகள், மத்திய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர். அவர்களிடம் துருக்கி சென்றது குறித்து விசாரிக்கப்பட்டது.

வெளிக்கிழமையில் இருந்து துருக்கியில் இருந்து திரும்பியவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி கூறுகையில், சிரியாவிற்குள் நுழைய முற்பட்டது தொடர்பான அவருடையை விளக்கம் திருப்திகரமானதாக இல்லை. மதகலவரங்கள் கொண்ட சிரியாவில் சன்னி இஸ்லாமியர்களுக்கு சமூக சேவை செய்வதற்கு சிரியா சென்றோம் என்று குழுவில்உள்ள நபர் தெரிவித்துள்ளார். ஆனால் துருக்கி வழியாகே ஏன் எல்லையை கடக்க முயற்சி செய்தனர் என்பது தொடர்பாக அவர்கள் பதில் தெரிவிக்கவில்லை. என்றார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தனது குழந்தைகளையும் அழைத்து சென்றது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

1984 சீக்கிய கலவரம்; போலீசால் முடிக்கப்பட்ட வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கிறது மத்திய அரசு - தகவல்கள்

போலீசால் முடிக்கப்பட்ட 1984 சீக்கிய கலவரம் வழக்கில் மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை அமைக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 1984–ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை போலீசால் முடிக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கு தொடர்பாக முழுவிசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சீக்கிய கலவரம் தொடர்பான விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டெல்லி சட்டமன்றத் தேர்தலை அடுத்து வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. 

புலனாய்வு குழுவில் இடம்பெறுபவர்கள் அடுத்த மூன்று நாட்களில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.பி. மாத்தூர் தலைமையிலான கமிட்டி, 225 வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதனையடுத்து சிறப்பு புலனாய்வு விசாரணை குழு அமைக்க உள்துறை அமைச்சகத்தால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கமிட்டி கடந்த டிசம்பர் மாதம் அமைக்கப்பட்டது, கமிட்டிக்கு மூன்று மாதங்கள் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் கமிட்டி 45 நாட்களுக்குள் முடித்து அறிக்கையை அளித்துள்ளது.

41 ஆயிரத்தை வாங்கிவிட்டு, பாலியல் பலாத்காரத்தை மறந்துவிடு பீகார் பஞ்சாயத்து தீர்ப்பு

41 ஆயிரத்தை வாங்கிவிட்டு, பாலியல் பலாத்காரத்தை மறந்துவிடு என்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பீகார் பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதிகார் மாவட்டம் கோதா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பிரகாஷ் ரவிதாஸ் என்பவர், மகாதலித் சமூகத்தை சேர்ந்த திருமணமான பெண்ணை, இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி உதவிபெற ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளார். மகாதலித் சமூகத்தை சேர்ந்த அந்தப்பெண் அங்கு சென்றபோது, அவரை பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி வெளியில் சொல்லக் கூடாது என்றும் பிரகாஷ் மிரட்டியுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை ஊர் பஞ்சாயத்தாரிடம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விசாரித்த பஞ்சாயத்தார், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.41 ஆயிரத்தை பிரகாஷ் கொடுக்கவேண்டும். அதனை வாங்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரத்தை மறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். ஆனால் உள்ளூர் ரவுடியான பிரகாஷ் பணமெல்லாம் கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். இதுதொடர்பான தகராறில் அந்தப்பெண்ணின் கணவரையும் பிரகாஷ் தீ வைத்து கொளுத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெண்ணின் கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், கதிகார் போலீஸ் அதிகாரி ஷத்ரநீல் சிங்கை சந்தித்து புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். “பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட நரேஷ் ரவிதாஸ் என்பவரை கைது செய்துள்ளோம். முக்கிய குற்றவாளியான பிரகாஷ் ரவிதாஸ் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம்.’’ என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பீகாரில் இதுபோன்ற சம்பவங்களுக்கு பணத்தை வாங்கிவிட்டு மறந்துவிட பஞ்சாயத்தார் உத்தரவிடுவது புதியது இல்லை. கடந்த ஆண்டு கிஷண்கஞ்ச் மாவட்டத்தில், சகோதரர்கள் 4 பேரால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 7 மாத கர்ப்பிணியாக சிறுமி இருந்தபோது விசாரித்த பஞ்சாயத்தார், ‘பாலியல் பலாத்காரம் செய்தவர்களிடம் இருந்து ரூ. 50 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு கருவைக் கலைத்து விட வேண்டும்’ என்று தீர்ப்பளித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் புகார் அளித்தார். சிறுமியின் புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைதுசெய்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முசாபர்பூர் மாவட்டத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கருவுற்றாள். அப்போதும், ரூ.2 லட்சத்தை வாங்கிக் கொண்டு கருவைக் கலைக்கும்படி பஞ்சாயத்தார் மிரட்டல் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேக்ஸ்வெல், மார்ஷ் நேர்த்தியான ஆட்டத்தால் தப்பிய ஆஸ்திரேலியா 278 ரன்கள் எடுத்தது

முத்தரப்பு கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், மேக்ஸ்வெல், மார்ஷ் ஆகியோரது நேர்த்தியான ஆட்டத்தினால் மோசமான நிலையில் இருந்து தப்பிய ஆஸ்திரேலிய அணி 278 ரன்கள் எடுத்தது.

மூன்று நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் 15 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவும், 9 புள்ளிகளுடன் இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ஒரு வெற்றியும் பெறாத இந்தியா பரிதாபமாக வெளியேறியது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெர்த் நகரில் இன்று நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் பிஞ்ச் 3 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட நிலையில் ரன்எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய 12 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். பெய்லியும் 2 ரன்களில் அவுட் ஆனார். சுமித் மட்டும் நீதானமாக ஆடினார். மேக்ஸ்வெல்லுடன் கைகோர்த்து ஆடிய சுமித் 40 ரன்களில் அலி பந்துவீச்சில் அவுட் ஆனார். 
ஆட்டம் தொடங்கியதுமே ஆண்டர்சன் இரண்டு விக்கெட்களை எடுத்து ஆஸ்திரேலியாவின் அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனினும் நிலையை புரிந்துஆடிய மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் தங்களது நேர்த்தியான ஆட்டத்தினால் ரன்சேர்க்க தொடங்கினர். மேக்ஸ்வெல் சற்றுஅதிரடி காட்டி பவுண்டரிகளும் அடித்தார். 

29.3 வது ஓவரில் பவுண்டரி அடித்து மேக்ஸ்வெல் அரைசதத்தை கடந்தார். தொடர்ந்து நான்கு விக்கெட்களை வீழ்த்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரண்டு வீரர்களும் நிலைத்து நின்று ரன்கள் சேர்த்தனர். 30 ஓவர்களில் 120 ரன்கள் மட்டும் ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்தவேளையில் இவரும் நேர்த்தியான ஆட்டம் மூலம் அணியின் ரன்கணக்கை மோசமான நிலையில் இருந்து மேலே கொண்டு சென்றனர். சதத்தைநோக்கி விளையாடிய மேக்ஸ்வெல் 40 ஓவரில் கடைசி பந்தில் பிராட் பந்துவீச்சில் அவுட் ஆனார். 98 பந்துகளை எதிர்க்கொண்ட மேக்ஸ்வெல் 95 ரன்கள் எடுத்தார். இதில் 15 பவுண்டரியும் அடங்கும். மேக்ஸ்வெல்லுக்கு பக்கபலமாக நின்றுவிளையாடிய மார்ஷ் 60 ரன்களில் அவுட் ஆனார். 

பவுல்க்னெர் (நாட் அவுட்) அரைசதம் அடித்து அணியை வலுவான நிலையை எட்டசெய்தார். ஹேடின் 9 ரன்னிலும், ஜான்சன் 3 ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 278 ரன்கள் எடுத்தது. ஓரளவு வலுவானநிலையில் உள்ள ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு 279 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

இப்போட்டி  உலக கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இதே இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் சந்திக்க இருப்பதால் அதற்கு இது சரியான ஒத்திகையாக பார்க்கப்படுகிறது. மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக்கில் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவிடம் தலா 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. அதற்கு இந்த முறை வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க இங்கிலாந்து முயற்சி செய்யுமா என்பது  இனிதெரியவரும். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் திரும்புவது ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை மேலும் பலப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இங்கிலாந்து தனது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. இயான் பெல்லும், மொயீன் அலியும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். 

Thursday 29 January 2015

நடிகர் திலீபும்-மஞ்சுவாரியாரும் சட்டப்படி பிரிகிறார்கள்

எர்ணாகுளம்

மலையாள பட உலகின் முன்னணி நடிகர் திலீப்  இவர் 1995 ஆம் ஆண்டு தன்னுடன சல்லாபம் படத்தில் ந்டைத்த மஞ்சுவாரியாரை காதலித்தார்.
பினர் இவரகளது திருமனம்  1998 ஆம் ஆண்டு நடந்தது.இவர்களுக்கு  மீனாட்சி என்ற மகள் இருக்கிறார்.  16 வருடங்கள்  சந்தோஷமாக குடும்பம் நடத்திய இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு  ஏற்பட்டு பிரிந்தார்கள். 

இவர கள் இருக்கவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவுக்கு மற்றொரு நடிகை   காவ்யா மாதவன் தான் காரணம் என கூறபட்டது.

கடந்த ஜூலை மாதம் விவாகரத்து கேட்டு   இருவரும் எர்ணாகுளம் கோர்ட்டில் மனு  தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த  நீதிபதி மோகன் தாஸ் இருவரையும் அழைத்து பேசினார்.   விவாகரத்து முடிவை  மறு பரிசீலனை செய்யும்படி  6 மாதம் அவகாசம் கொடுத்தார்.

 அந்த அவகாசம் முடிவடைந்து நேற்று மீண்டும் வழக்கு  விசாரணைக்கு வந்தது. அப்போது  மஞ்சுவாரியரும், திலீப்பும் நேரில் ஆஜரா னார்கள். நீதிபதியிடம் சேர்ந்து வாழ முடியாது விவாகரத்து வேண்டும் என்று முறையிட்டனர்.  இதை யடுத்து  31-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும்  என்று நீதிபதி   அறிவித்தார். நாளை இருவரும் விவாகரத் கிடைக்கும் என  எதிர்பார்க் கப்படுகிறது. இதை தொடர்ந்து இருவரும் சட்டபடி பிரிவார்கள்.

கோஒர்ட்டுக்கு வந்த் திலீப் நிருபர்களிடம் நாங்கள் தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருப்போம்.   தாயார் என்ற முறையில் அவரது மகளை அவர் எப்போது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.என்று கூறினார்.

ஆனால் மஞ்சுவாரியார் எதுவும் பேச வில்லை வரது முகத்தில் வருத்தமும் கடுமையும் தெரிந்தது.

உபேர் கார் டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நியூயார்க்,

உபேர் நிறுவன கார் டிரைவரால்  பலாத்காரம் செய்யப்பட்ட பெண் அமெரிக்காவில்  உள்ள நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி  மனு தாக்கல் செய்துள்ளார். 

உத்தரப் பிரதேசம் மதுரா அருகேயுள்ள ராம் நகரைச் சேர்ந் தவர் சிவகுமார் யாதவ் (32). டெல்லியில் உபேர் கால் டாக்ஸி யில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம்  நிதி நிறுவன பெண் ஊழியரை சவாரி அழைத்துச் சென்றபோது பலாத்காரம் செய்து கொலைமிரட்டலும் விடுத்தார்.அப்பெண் அளித்த புகாரின் பேரில் சிவகுமார் யாதவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்  உபேர் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி 36 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தனது பெயரை குறிப்பிடாமல் அமரிக்காவில் உள்ள கலிபோர்னியா மத்திய நீதிமன்றத்தில் அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 

.வீட்டுமுன் குவிந்த பனியை அகற்றாததால் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரிக்கு அபராதம்

வாஷிங்டன், 

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியின் வீடு பாஸ்டன் நகரில் உள்ள பிங்னி தெரு பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கடும் பனிப்புயல் வீசியது. இதனால் தெரு முழுவதும் பனிக்குவியல் நிறைந்தது. அவற்றை அந்த தெருவாசிகள் அகற்றி வந்தனர்.
ஆனால் ஜான் கெர்ரியின் வீட்டு முன் குவிந்த பனித்துகள்கள் அனைத்தும் அகற்றப்படாமல் அப்படியே கிடந்தது. இது குறித்து நகர நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இதைத்தொடர்ந்து அங்கு ஆய்வு செய்த அதிகாரிகள், பனிக்குவியலை அகற்றாத ஜான் கெர்ரிக்கு அபராதம் விதிக்க முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு 50 டாலர் (சுமார் ரூ.3 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டது.இது குறித்து ஜான் கெர்ரியின் செய்தி தொடர்பாளர் கிளன் ஜான்சன் கூறுகையில், ஜான் கெர்ரி உலகம் முழுவதும் பயணம் செய்து வருகிறார். அதனால்தான் இந்த சம்பவம் நடந்து விட்டது. எனினும் இந்த அபராதத்தை அவர் உடனடியாக கட்டிவிடுவார் என்று கூறினார்.

இந்தியாவில் ஆணுறை தட்டுப்பாடால் 6 மாநிலங்களில் எச்.ஐ.வி நோய் பரவும் அபாயம்

புதுடெல்லி

மத்திய அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார நிலையங்களிலும் ஆணுறை வழங்கபட்டு  வருகிறது. சமீபத்தில் கடந்த சில நாட்களாக இந்த ஆணுறை வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த தட்டுப்பாடு இந்தியாவின் 6 மாநிலங்களில் நிலவுகிறது.இதனால் எச்.ஐவி தொற்று குறித்து பொது சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது.

அரியானா, உத்த்ரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆணுறை தட்டுப்பாடு கடந்த 8 மாதங்களாக நிலவி வருகிறது.இங்கு ஒப்பீட்டு அளவில் அதிக அளவு எச்.ஐ.வி பாதிப்பு உள்ளது.

உத்தரபிரதேசம், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும்  தட்டுப்பாடு நெருக்கடியை எதிர்கொள்கின்றன. அதிகாரத்தில் உள்ளவர்கள் கொள்முதல் செய்வதில் தாமதம் காட்டுவதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பொது சுகாதார திட்டங்கள் மூலம் ஆணுறை வினியோகிக்கும் குழுக்கள் மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கத்திற்கு அவசரமாக  வினியோகிக்க  ஆணுறை தேவை இருப்பதாக கடிதங்கள் எழுதி உள்ளன.

சமீபத்தில் இந்த பிரச்சினை மத்திய சுகாதார துறையிடம் எழுப்பபட்டது. இதை தொடர்ந்து  சுகாதார துறை செயலாளர் தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு அமைப்பின் மூத்த அதிகாரிகளை நேற்று சந்தித்தார்.

இந்த பிரச்சினை எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. நாங்கள் இது தொடர்பாக நாளை ஆலோசனை கூட்டம் நடத்தி இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்யப்பட்டு  விரைவில் இந்த பிரச்சினை தீர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார செயலாளர்  லோவ் வர்மா கூறினார்.

முத்தரப்பு கிரிக்கெட்: 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா: பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்

பெர்த்,

இங்கிலாந்து எதிரான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போடியில் இந்திய அணி 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 15 புள்ளிகளுடன் (3 வெற்றி, ஒரு முடிவில்லை) இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. இங்கிலாந்து 5 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், இந்தியா 2 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

இந்த நிலையில் முத்தரப்பு தொடரில் பெர்த்தில் இன்று   இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது. இதையடுத்து இந்திய அணியில் முதலில் களம் இறங்கிய தவானும் , ரகானேவும் ஓரளவு சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்து இருந்த போது ஷிகர் தவான் 38(65 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி (8), சுரேஷ் ரெய்னா (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் வந்த வீரர்களான  ராயுடு (12),  ரகானே(73) தோனி(17) பின்னி(7), ஜடேஜா(5), அக்சார் படேல்(1), முகம்மது சமி (25) ஆகியோர்  அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தால் இந்திய அணி 48.1 ஓவரில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கவுள்ளது. இப்போட்டியில் வெல்லும் அணி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Saturday 24 January 2015

ஒபாமாவை கவர்ந்த மோடியின் வாழ்க்கை

கடின உழைப்பால் வாழ்க்கையில் கீழ்மட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து நாட்டின் பிரதமர் ஆனவர் நரேந்திர மோடி. அவரது வாழ்க்கை தன்னை பெரிதும் கவர்ந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக பிரபல ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், டீ விற்பவராக இருந்து படிப்படியாக உயர்ந்து இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடியின் வாழ்க்கை வியக்கத்தக்கது என்றும், இந்தியர்கள் எதிலும் திட்டமிட்டு பணியாற்றி வெற்றி பெறுபவர்கள் என்பதை அவரது வாழ்க்கை பிரதிபலிப்பதாகவும் கூறி இருக்கிறார்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல மோடி காட்டும் ஆர்வம் பாராட்டுக்குரியது என்றும், இந்தியாவும் அமெரிக்காவும் சர்வதேச அளவில் முக்கிய பங்குதாரராக விளங்குவதால், இந்திய குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளுமாறு அவர் விடுத்த அழைப்பை தான் ஏற்றுக் கொண்டதாகவும், இது தனக்கு கிடைத்த கவுரவம் என்றும் ஒபாமா தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். 

இந்தியாவில் பயன்படுத்துவதற்காக ஒபாமாவின் அதிநவீன ‘பீஸ்ட்’ கார் டெல்லி வந்தது

புதுடெல்லி, 

இந்திய சுற்றுப்பயணத்தின் போது பயன்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அதிநவீன ‘பீஸ்ட்’ கார் டெல்லி வந்து சேர்ந்தது.

குடியரசு தினவிழா

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது பயன்படுத்துவதற்காக, அவரது அதிநவீன ‘பீஸ்ட்’ கார் டெல்லி வந்து சேர்ந்துள்ளது. குறிப்பாக குடியரசுத்தின விழாவுக்காக ராஜபாதையில் ஒபாமா வரும்போது, இந்த காரில் தான் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர், இந்திய ஜனாதிபதியுடன் இணைந்தே வர வேண்டும் என்ற நடைமுறை இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையை ஒபாமா கடைப்பிடித்தால், இந்தியாவில் பீஸ்ட் காரை பயன்படுத்தாத முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.

நகரும் கோட்டை

இதற்கிடையே ஒபாமாவின் ‘பீஸ்ட்’ காரில் அடங்கியுள்ள மலைக்க வைக்கும் வசதிகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘நகரும் கோட்டை’ என வர்ணிக்கப்படும் இந்த கார், 8 டன் எடை கொண்டது.

இந்த கார் 8 அங்குல தடிமன் கொண்ட உடல் கவசத்தையும், 5 அங்குல தடிமன் கொண்ட குண்டு துளைக்காத கண்ணாடி ஜன்னல்களையும் கொண்டது. இவை, உள்ளே இருக்கும் ஜனாதிபதியை ரசாயன தாக்குதல் உள்ளிட்ட அனைத்து விதமான தாக்குதல்களில் இருந்தும் காக்க வல்லது.

சிறப்பு நுரை

காரின் கதவுகள் அனைத்தும், போயிங்- 757 ரக விமானங்களின் கதவுகளை ஒத்திருக்கும். இந்த காரில் உருக்கினால் செய்யப்பட்ட விளிம்புகளுடன் கூடிய, ‘பஞ்சர்’ ஆகாத டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த விளிம்புகள் பொருத்தப்பட்டிருப்பதால், கார் பஞ்சர் ஆனாலும், நிற்காமல் சென்று விட முடியும்.

காரின் எரிபொருள் டேங்க் கூட, சிறப்பு நுரையால் மூடப்பட்டிருக்கும். இதனால் எரிபொருள் டேங்க் வெடிக்காமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.

இந்த காருக்கு என தனிப்பட்ட மாடல் பெயர் இல்லை. இது பல்வேறு வகையான வாகனங்களின் கலவை என்றுகூட கூறலாம். காரணம், இந்த காரில் உள்ள கைப்பிடிகள், கண்ணாடிகள், கதவுகள், முகப்பு விளக்குகள், பக்க கண்ணாடிகள் என அனைத்தும் வெவ்வேறு மாடல்களை சார்ந்தவை ஆகும்.

பழுதடைந்துள்ளது

என்னதான் ‘நகரும் கோட்டை’ என இந்த கார் பெருமிதமாக கூறப்பட்டாலும், கடந்த காலங்களில் பலமுறை இந்த கார் காரணமின்றி பழுதடைந்து இகழ்ச்சிக்குள்ளாகி உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஒபாமா இஸ்ரேல் பயணம் மேற்கொண்ட போது, அங்கும் இந்த சம்பவம் நடந்தது.

மேலும் இந்த காரை ‘எரிபொருள் விழுங்கி’ என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அழைக்கிறார்கள். ஏனெனில் இந்த கார் ஒரு லிட்டருக்கு 3.4 கி.மீ.தான் ‘மைலேஜ்’ கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி துறைக்கு சலுகைகள் எதிர்பார்க்கலாம்: மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு இருக்காது? நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசகம்

டாவோஸ், 

‘மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு இருக்காது; உற்பத்தி துறைக்கு சலுகைகள் எதிர்பார்க்கலாம்’ என்பதை நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசகமாக உணர்த்தி உள்ளார்.

முழுமையான முதல் பட்ஜெட்

மத்தியில் கடந்த மே மாதம் பதவி ஏற்றுள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முதலாவது முழு அளவிலான பட்ஜெட், அடுத்த மாதம் 28-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது.

நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்யவுள்ள இந்த பட்ஜெட், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உற்பத்தி துறை ஊக்குவிப்பு

இந்த நிலையில், சுவிஸ் நாட்டில் உள்ள டாவோஸ் நகரில், உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் பேசினார். மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும் அம்சங்கள் பற்றி அவர் சூசகமாக சில அம்சங்களை தெரிவித்தார்.

அப்போது அவர், “உற்பத்தி துறையை ஊக்குவிக்க வேண்டும் என்பது எங்களது செயல்திட்டத்தில் முக்கியமான அம்சம். கடந்த பட்ஜெட்டின் போது மிகக்குறைந்த கால அவகாசம்தான் இருந்தது. இருப்பினும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை, தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலத்தை ஊக்குவிக்கும் அறிவிப்புகளை தந்தோம். இந்த துறைகள் முன்னேற்றம் காண வேண்டும் என்று கருதுகிறோம். எனவே எங்கள் செயல்திட்டத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம்” என குறிப்பிட்டார்.

எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்

தொடர்ந்து அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் சூடு பிடித்து வருகின்றன. வருவாயைப் பெருக்கும் அரசின் திறனும் மேம்படும். வரி வீதங்களை உயர்த்துவதற்கு நான் ஆதரவானவன் அல்ல. அது உற்பத்தி துறையில் எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்” என கூறினார்.

எனவே மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வுகள் பெரிதான அளவு இருக்காது, உற்பத்தி துறைக்கு சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

நேற்று நடந்த உலக பொருளாதார மன்ற அமர்விலும் அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, இந்தியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. நாங்கள் மீண்டும் உயர்ந்த வளர்ச்சி வீதத்தை எட்டிப்பிடிக்க வாய்ப்புகள் உண்மையிலேயே இருக்கின்றன” என கூறினார்.

வரிகள் பற்றி அவர் பேசுகையில், “அர்த்தமற்ற விதத்தில் வரி விதிப்புகளுடன் நான் வர மாட்டேன். அது எங்களுக்கு கெட்ட பெயரைத்தான் தரும். நான் கூற விரும்புகிற செய்தி, எங்கள் ஆட்சியில் வரி விதிப்பு ஸ்திரமாக இருக்கும் என்பதுதான்” என குறிப்பிட்டார்.

மானியங்கள்

மானியங்களைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், “ஜனவரி 1-ந் தேதி முதல் நாங்கள் ஒரு புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறோம் (கியாஸ் மானியத்தை நேரடியாக வழங்குதல்). அதில் மானியங்கள் தவறான வழியில் போவதை தடுத்து நிறுத்தப்படும். ஒட்டுமொத்த மானிய செயல்பாடுகளை மாற்றி சீர் செய்ய உள்ளோம். ஆனால் அது மிக நீண்ட பயணம்” என கூறினார். 

பீகார் மாநிலத்தில் பயங்கரம்: பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பலி; 16 பேர் படுகாயம்

அரா, (பீகார்), 

பீகார் கோர்ட்டு வளாகத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

விசாரணைக் கைதிகள்

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அரா என்ற சிறு நகரம் உள்ளது. இங்குள்ள சிவில் கோர்ட்டில் நேற்று காலை 11.30 மணி அளவில் விசாரணை கைதிகளை ஆஜர்படுத்துவதற்காக போலீசார் ஒரு வேனில் ஏற்றி வந்தனர்.

அந்த வேன் கோர்ட்டு வளாகத்தில் ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டு அதில் இருந்த கைதிகள் அனைவரும் ஒவ்வொருவராக கீழே இறக்கப்பட்டனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக அங்குள்ள லாக்-அப் அறைக்கு கொண்டு செல்லும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

மனித வெடிகுண்டு தாக்குதல்

அப்போது அந்த வேன் நிறுத்தப்பட்டு இருந்த இடத்துக்கும், அங்கிருந்த புல்வெளி பகுதிக்கும் இடையே உட்கார்ந்து இருந்த 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கே வேகமாக ஓடி வந்தார். அவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றார்.

அப்போது அந்த பெண் தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை திடீரென வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

2 பேர் பலி

இதில் பலத்த குண்டு காயங்களுடன் தூக்கி வீசப்பட்ட அந்த பெண்ணும், போலீஸ்காரரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அந்த இடத்தில் நின்றிருந்த 3 போலீஸ்காரர்கள், 3 வக்கீல்கள் உள்பட 16 பேர் பலத்த குண்டு காயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைதிகள் தப்பி ஓட்டம்

இதனிடையே மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் ஏற்பட்ட அமளியையும், குழப்பத்தையும் பயன்படுத்தி வேனில் இருந்து கீழே இறக்கப்பட்ட விசாரணைக் கைதிகள் 2 பேர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இவர்கள் இருவரும் பல்வேறு அதிபயங்கர குற்றங்களில் தொடர்பு உடையவர்கள் என்று கருதப்படுகிறது. அவர்களைத் தேடிப்பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சிறிது நேரத்தில் கோர்ட்டு வளாகம் இழுத்து மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.

வெடிகுண்டு சிதறல்கள்

மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலியான பெண் யார் என்பது இன்னும் அடையாளம் கண்டறியப்படவில்லை. எனினும், பலியான போலீஸ்காரர் பெயர் அமித்குமார்(40) என்பது தெரிய வந்து உள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து வெடிகுண்டு சிதறல்களும், செல்போன் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. மேலும் சம்பவ இடத்துக்கு உடனடியாக தேசிய விசாரணை முகமை குழுவினர் விரைந்து வந்து தடயவியல் ஆதாரங்களை சேகரித்தனர். இதன்மூலம் குண்டு வெடித்ததன் அடர்த்தி மற்றும் இயற்கைத் தன்மை ஆகியவை உறுதி செய்யப்படும்.

தீவிரவாத தாக்குதல் அல்ல

வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து மாநில கூடுதல் டி.ஜி.பி. குப்தேஷ்வர் பாண்டே கூறும்போது, ‘‘இது தீவிரவாத தாக்குதல் சம்பவம் கிடையாது. ஆனால் குண்டு எடுத்து வந்த பெண் மனித வெடிகுண்டாக செயல்பட்டு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பயங்கர குற்றவாளிகளை விடுவிக்கும் நோக்குடன் இந்த தாக்குதலை அந்த பெண் நடத்தி இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது’’ என்றார்.

தப்பியோடிய கைதிகள் இருவரும் நந்து சர்மா, அகிலேஷ் உபாத்யாயா என்று தெரிய வந்துள்ளதாக மாநில முன்னாள் உள்துறை செயலாளரும் அரா தொகுதி எம்.பி.யுமான ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

நந்து சர்மா, 2009-ம் ஆண்டு இதேபோன்று தனது கையாட்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி கோர்ட்டு வளாகத்தில் இருந்து தப்பி ஓடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளக்கம் அளிக்க உத்தரவு

மனித வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக பீகார் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நிகழ்த்தப்படலாம் என்பதால் அனைத்து மாநில அரசுகளும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய உள்துறை உத்தரவிட்ட நிலையில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்து உள்ளது. 

தேர்தல் விதிமீறல் புகார்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்

புதுடெல்லி, 

தேர்தல் விதிமீறல் புகாருக்குள்ளான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்தது. மேலும், வாக்காளர்களை பணம் வாங்க சொன்னதற்காக அவருக்கு மீண்டும் நோட்டீசு அனுப்பி உள்ளது.

பா.ஜனதா புகார்

டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, கடந்த 14-ந்தேதி ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த ஒரு பேட்டி தொடர்பாக, அவர் மீது மாநில பா.ஜனதா தலைவர் சதிஷ் உபாத்யாயா தேர்தல் கமிஷனில் ஒரு புகார் அளித்தார்.

அப்பேட்டியில், டெல்லியில் வகுப்பு கலவரங்களை பா.ஜனதா தூண்டி வருவதாகவும், டெல்லியில் தேவாலயங்கள் மீதான தாக்குதலுக்கு பா.ஜனதா பொறுப்பு என்றும் கெஜ்ரிவால் கூறியதாக சதீஷ் உபாத்யாயா கூறி இருந்தார்.

அந்த புகாரின்பேரில், மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் கமிஷன் அறிக்கை மற்றும் கெஜ்ரிவால் பேட்டி பதிவு செய்யப்பட்ட வீடியோ சி.டி.யை கேட்டு வாங்கியது. சி.டி.யில், ‘சமீபகாலத்தில் டெல்லியின் பலபகுதிகளில் வகுப்பு கலவரத்தை தூண்டி விட்டதற்கு பா.ஜனதாவே பொறுப்பு’ என்று கெஜ்ரிவால் பேசி இருந்தது தெரிய வந்தது.

நோட்டீசு

இதற்கு விளக்கம் கேட்டு, கடந்த 17-ந்தேதி, கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பியது. கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டதால், 23-ந்தேதி காலை 11 மணிவரை அவருக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அதற்குள் கெஜ்ரிவால் தனது விளக்கத்தை அனுப்பி வைத்தார்.

பதற்றம்

அதை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து அவருக்கு தேர்தல் கமிஷன் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தங்கள் விளக்கத்தையும், தங்களது பேட்டி அடங்கிய வீடியோ சி.டி.யையும் கவனமாக ஆய்வு செய்தோம். தாங்கள் பேட்டியில் கூறியதை தாங்களே மறுக்கவில்லை.

எனவே, தங்களது கருத்து, வெவ்வேறு சமூகம் மற்றும் மதங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை மேலும் அதிகப்படுத்தவும், பரஸ்பர வெறுப்புணர்வை உருவாக்கவும், பதற்றத்தை உண்டாக்கவும் கூடியது என்று தேர்தல் கமிஷன் கருதுகிறது.

கண்டனம்

மேலும், அமைதியான தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்கக் கூடியது என்றும் கருதுகிறது. எனவே, தங்கள் கருத்து, தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும்.

ஆகவே, தேர்தல் கமிஷன் தனது அதிருப்தியை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த தேர்தல் விதிமீறலுக்காக தங்களுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. எதிர்காலத்தில், தாங்கள் பொது இடங்களில் தெரிவிக்கும் கருத்துகளில் எச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

27-ந்தேதிவரை கெடு

மேலும், ‘பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு, ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள்’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதற்காக, அவருக்கு நேற்று மீண்டும் தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பியது. அதில், 27-ந்தேதி காலை 11 மணிக்குள் விளக்கத்தை தெரிவிக்குமாறு கூறியுள்ளது.

அப்படி தெரிவிக்க தவறினால், மேற்கொண்டு அவருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கும் என்றும் கூறியுள்ளது. 

பாக்.கில் தீவிரவாத இயக்கமான ‘ஜமாத் உத் தாவா’ வுக்கு தடை இல்லை: தூதர் அறிவிப்பு

புதுடெல்லி, 

பாகிஸ்தானில் இயங்கி வரும் ‘ஜமாத் உத் தாவா’ தீவிரவாத அமைப்பினை ஐ.நா. தடை செய்துள்ளது. இந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்காவும் வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில், ‘ஜமாத் உத் தாவா’ அமைப்பை பாகிஸ்தான் தடை செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இப்போது அதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இது குறித்து டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறுகையில், “நாங்கள் ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் செயல்படுகிறோம். ‘ஜமாத் உத் தாவா’வின் வங்கிக்கணக்குகளை முடக்கி உள்ளோம். அதன் தலைவரின் வெளிநாட்டுப்பயணத்தை தடை செய்திருக்கிறோம். ஐ.நா. தீர்மானத்தின்படி என்ன தேவையோ அதை செய்வோம்” என்றார்.

‘ஜமாத் உத் தாவா’ அமைப்பின் தலைவரும், மும்பை தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவருமான ஹபீஸ் முகமது சயீத்தை கைது செய்வது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அப்துல் பாசித், “இப்படிப்பட்ட தனிநபர்களை கைது செய்வது பற்றி ஐ.நா. தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை” என பதில் அளித்தார்.

ஒபாமாவின் இந்திய வருகையின்போது அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

புதுடெல்லி, 

ஒபாமாவின் இந்திய வருகையின்போது, அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என தெரிகிறது.

ஒபாமா வருகை

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நாளை இந்தியாவுக்கு வருகிறார். குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஒபாமாவின் இந்திய வருகையின்போது, இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

ராணுவ ஒப்பந்தம்

அவற்றில், ராணுவ ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என தெரிகிறது. இரு நாடுகளும் தத்தமது போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை ஒருவர் மற்றவரது தளங்களில் நிறுத்திக் கொள்ளவும், எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. மேலும், அவசர காலத்தின்போது, ஒன்றுக்கொன்று பாதுகாப்பு அரணாக இயக்கப்படவும் வழி வகுக்கிறது.

இத்தகைய ராணுவ வசதிகளை மற்றொரு நாட்டுக்கு அமெரிக்கா அளிக்க வேண்டுமானால், அதற்கான ஒப்பந்தத்தில், சம்பந்தப்பட்ட நாடு கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க சட்டம் கூறுகிறது. எனவே, இத்தகைய ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகிறது.

பலன்கள்

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ராணுவ மந்திரியாக இருந்த ஏ.கே.அந்தோணி, இந்த ஒப்பந்தத்தை பரிசீலிக்கக்கூட மறுத்து விட்டார். இந்த ஒப்பந்தத்தால், இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படும் என்று அவர் கருதியதே இதற்கு காரணம்.

ஆனால், தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக, இந்தியா-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமை முடிவடைந்தது.

அப்போது, ஒப்பந்தத்தை பரிசீலிக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியது. அதற்கு இந்திய தரப்பு, இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு எவ்வகையில் பலன் அளிக்கும் என்று கேட்டது. இந்த ஒப்பந்தத்தால், இந்திய உளவு விமானங்களும், கப்பல்களும் அமெரிக்க செயற்கைகோள்கள் மூலம் முக்கிய தகவல்களை பெற முடியும் என்ற நன்மையும் உள்ளது.

கையெழுத்து

எனவே, ஒப்பந்தத்துக்கு ஆதரவான மனநிலைக்கு மத்திய அரசு மாறி உள்ளது. ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது பற்றிய அறிவிப்பு, ஒபாமாவின் இந்திய வருகையின்போது வெளியிடப்படும் என்று தெரிகிறது.

இந்த ஆண்டு அத்வானி, ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது?

புதுடெல்லி, 

இந்த ஆண்டில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பத்ம விபூஷண் விருது

கலை, இலக்கியம், மருத்துவம், சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ஆண்டு தோறும் மத்திய அரசு தேர்ந்தெடுத்து பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. குடியரசு தின விழாவையொட்டி, விருதுகளுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவிக்கும்.

இந்த நிலையில், இந்த ஆண்டில் பத்ம விருது பெற வாய்ப்பு உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 148 பேர் பற்றியவிவரம் நேற்று வெளியானது.

ரஜினிகாந்த்

பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், யோகா குரு பாபா ராம்தேவ், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் ஆகியோர் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார், இயக்குனரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி, நடிகர் சல்மான் கானின் தந்தையும் பாடல் ஆசிரியருமான சலீம் கான் உள்ளிட்ட பலரது பெயர்களும் பத்ம விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக அந்த தகவல் தெரிவித்தது.

மத்திய அரசு மறுப்பு

ஆனால் இந்த தகவலை மத்திய அரசு மறுத்து உள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ‘‘பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதிதான் அறிவிக்கப்படும். 2015-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பற்றி மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை. எனவே விருதுகளுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டதாக வெளியான பெயர் பட்டியல் ஊகத்தில் அடிப்படையிலானது ஆகும். அந்த பட்டியல் அரசின் ஒப்புதல் பெற்றது அல்ல’’ என்றார்.

தகவல் இல்லை

பத்ம விபூஷண் விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் பற்றி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அது பற்றிய தகவல் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். 

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை அனுமதிக்க முடியாது: பாகிஸ்தானுக்கு ஒபாமா கண்டிப்பு

புதுடெல்லி, 

நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

ஒபாமா நாளை வருகிறார்

தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர், மனைவி மிச்செல்லுடன் ‘ஏர்போர்ஸ்-1’ விமானம் மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லி வந்து சேருகிறார்.

இதையொட்டி ஒபாமா பிரபல ஆங்கில பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி அளித்து உள்ளார்.

பாகிஸ்தானுக்கு கண்டிப்பு

அதில், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாக கூறி பாகிஸ்தானை பகிரங்கமாக கண்டித்து இருக்கிறார்.

அவர் கூறி இருப்பதாவது:-

தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றி வருகிறது. இருந்தபோதிலும், பாகிஸ்தான், தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ அனுமதிக்க முடியாது என்பதை நான் அந்த நாட்டுக்கு தெளிவுபடுத்தி விட்டேன். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.

தண்டிக்க வேண்டும்

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் சிலரும் பலி ஆனார்கள். பின்னர் மும்பையில் 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் சிலரும் உயிர் இழந்தனர். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை குற்றவாளி கூண்டில் ஏற்றி, பாகிஸ்தான் தண்டிக்க வேண்டும்.

எனது கடந்த இந்திய பயணத்தின் போது நான் முதலில் மும்பை வந்தேன். அங்கு தாஜ் ஓட்டலில் உள்ள நினைவிடத்துக்கு சென்று, தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களையும் சந்தித்து பேசினேன். அப்போது, நமது நாடுகளின் பாதுகாப்புக்காக நாம் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று இந்திய மக்களிடம் தெரிவித்தேன். இந்தியாவும், அமெரிக்காவும் சர்வதேச அளவில் முக்கிய பங்குதாரர்களாக விளங்குகின்றன.

இந்தியாவுக்கு உதவ தயார்

சில விஷயங்களில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிய போதிலும், பரஸ்பர நம்பிக்கை, மரியாதையின் அடிப்படையில் நாம் இணைந்து செயல்பட முடியும். தலைவர்கள் மட்டத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்படும் முடிவுகளை நமது அரசாங்கங்கள் செயல்படுத்த வேண்டும்.

இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் வர்த்தகம், முதலீடு, உயர் தொழில்நுட்பம் போன்ற துறைகளின் மேம்பாட்டுக்கு இருந்து வரும் தடைகளை அகற்ற முடியும். இந்தியாவில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது.

தீவிரவாத எதிர்ப்பு போர் ஓயாது

தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போர் ஓயாது. இந்தியர்களும், அமெரிக்கர்களும் ஒன்றுபட்டு நடத்துகிற போர் இது. அணுஆயுத பரவலை தடுக்க இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. ஆப்கானிஸ்தானை மறுசீரமைக்க இந்தியா உதவி செய்வது பாராட்டுக்குரியது. அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்காக இந்தியா பல ஆண்டுகளாக உதவி வருகிறது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக் கூடத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் பலி ஆனார்கள். இந்த தாக்குதல், தீவிரவாதிகள் நம் அனைவரையும் அச்சுறுத்துவதை நினைவூட்டும் வேதனையான நிகழ்வு ஆகும்.

இவ்வாறு ஒபாமா கூறி உள்ளார்.

கிடப்பில் போடப்பட்ட வழக்கு

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து நடத்திய கொலைவெறி தாக்குதல்களில் 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களை நடத்திய 9 தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட இளம் தீவிரவாதி அஜ்மல் கசாப் மீது மும்பையில் தனிக்கோர்ட்டு அமைத்து விசாரணை நடந்தது. பின்னர் அவர் தண்டிக்கப்பட்டு, தூக்கில் போடப்பட்டார்.

ஆனால் இந்த தாக்குதல்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட தீவிரவாதிகளான லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் செயல்பாடுகள் பிரிவு தலைவர் ஜாகியுர் ரகுமான் லக்வி உள்ளிட்ட 7 பேர் மீது பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டாலும், 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சொத்து குவிப்பு வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்டது ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதம்

பெங்களூரு, 

சொத்து குவிப்பு வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும், சட்டத்திற்கு புறம்பாகவும் தொடரப்பட்டது என்று கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதத்தை எடுத்து வைத்தார்.

சொத்து பட்டியல் 

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, சொத்து பட்டியலை சுருக்கமாக அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், நேற்று 13–வது நாளாக மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி குமாரசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ், 25 பக்கங்கள் கொண்ட சொத்து பட்டியலை நீதிபதியிடம் வழங்கினார்.

வருமான வரி 


பின்னர் அவர் வாதிடுகையில், ‘என்னுடைய வாதத்தின் அடிப்படையில் ரூ.66.65 கோடிக்கான சொத்து பட்டியலை வழங்கியுள்ளேன். இதற்கான வரிமான வரி முறையாக செலுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சொத்து பட்டியல் தவிர லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கில் சேர்க்காத ரூ.96 லட்சம் சேமிப்பு கணக்கில் கூடுதலாக உள்ளது. இதற்கான வருமான வரியும் செலுத்தப்பட்டு இருக்கிறது’ என்றார்.

உடனே நீதிபதி குறுக்கிட்டு, ‘இதனை கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளீர்களா? அதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா?’ என்று கேட்டார். உடனே வக்கீல் நாகேஸ்வரராவ், கீழ் கோர்ட்டில் உரிய ஆவணங்கள தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக கூறியதுடன், அதற்கான ஆவணங்களை தேடிக்கொண்டு இருந்தார்

அறிக்கை பொய்யானது 

அப்போது அரசு தரப்பு வக்கீல் பவானிசிங் குறுக்கிட்டு, ‘இந்த அறிக்கை பொய்யானது, வழக்கை திசை திருப்பும் நோக்கத்துடன் சொத்து மதிப்பு கூடுதலாக காட்டப்பட்டு உள்ளது’ என்று கூறினார். உடனே நீதிபதி, ‘உங்களிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளதா?’ என்று கேட்டார். அதற்கு தன்னுடைய வாதத்தின்போது அவற்றை தாக்கல் செய்வதாக பவானிசிங் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, ‘இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யார்?’ என்று கேட்டார். இதற்கு ‘சம்பந்தம்’ என்று பவானிசிங் பதில் அளித்தார். அப்போது தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வக்கீல் சரவணன் குறுக்கிட்டு, ‘இந்த வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம நாயுடு தான். தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறேன்’ என்று கூறினார்.

வக்கீல்கள் லேசான வாக்குவாதம் 


உடனே பவானிசிங் குறுக்கிட்டு, ‘ஓய்வு பெற்ற அதிகாரியை எப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியும்?’ என்று கேட்டார். இதனால் பவானிசிங்குக்கும், சரவணனுக்கும் லேசான வாக்குவாதம் உண்டானது.

அப்போது நீதிபதி வக்கீல் சரவணனை பார்த்து, ‘உங்களது மனுதாரர் அன்பழகன் எங்கே?’ என்று கேட்டார். உடனே சரவணன், அவருக்கு பதிலாக தான் வக்காலத்து தாக்கல் செய்து வாதம் செய்து வருவதாக கூறினார்.

பின்னர் மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ் வாதாடும்போது, ‘சுதாகரன் திருமணத்தை ஜெயலலிதா தனது சொந்த செலவில் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அந்த திருமணம் நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் அ.தி.மு.க. கட்சியினரால் செய்யப்பட்டது ஆகும். கட்சியின் தலைவர் என்ற முறையில் திருமண விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்டார். சுதாகரன் திருமணத்திற்காக ஜெயலலிதா ரூ.6 கோடி செலவு செய்ததாக கூறுவது தவறானது’ என்றார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி 

பின்னர் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் தனது வாதத்தை தொடங்கிய வக்கீல் நாகேஸ்வரராவ், ‘திராட்சை தோட்டத்தின் மூலம் கிடைத்த வருமானம், நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் மூலம் கிடைத்த ரூ.14 கோடி, 7 கிலோ 40 கிராம் தங்க நகைகள், 1,116 கிலோ வெள்ளி பொருட்கள் அனைத்திற்கும் உரிய வருமான வரி செலுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு முற்றிலும் சட்டத்திற்கு விரோதமாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் தொடரப்பட்டது ஆகும்’ என்றார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 27–ந்தேதிக்கு நீதிபதி குமாரசாமி ஒத்திவைத்தார்.நேற்றுடன் ஜெயலலிதா தரப்பு வக்கீல் நாகேஸ்வரராவின் முதல்கட்ட வாதம் நிறைவுபெற்றது. இதனால் வருகிற 27–ந்தேதி சசிகலா சார்பில் அவரது வக்கீல் வாதத்தை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருபவர்: விடுதலை ஆன ஷர்மிளா மீண்டும் கைது தற்கொலைக்கு முயன்றதாக புதிய வழக்கு

கவுகாத்தி, 

வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு–காஷ்மீர் ஆகிய பகுதிகளில் ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை நீக்க வேண்டும் என்று மணிப்பூரைச் சேர்ந்த இரோம் ஷர்மிளா என்ற பெண், கடந்த 14 வருடங்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவரை மணிப்பூர் போலீசார் கைது செய்து தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்தனர். மணிப்பூர் செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஷர்மிளாவை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, நேற்று முன்தினம் மாலை ஷர்மிளா விடுதலை ஆனார். ஆனால், இம்பால் மார்க்கெட் வளாகத்தில் உடனடியாக அவர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார். இரவு முழுவதும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். நேற்று அவரது உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு போலீசார் கூறியதை ஷர்மிளா ஏற்கவில்லை.

இதையடுத்து, தற்கொலைக்கு முயன்றதாக புதிய வழக்கு பதிவு செய்து ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர். அரசு ஆஸ்பத்திரியில், அவருக்கு மூக்கு வழியாக வலுக்கட்டாயமாக உணவு செலுத்தப்பட்டு வருகிறது.

உற்பத்தி துறைக்கு சலுகைகள் எதிர்பார்க்கலாம் மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு இருக்காது? நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசகம்

டாவோஸ், 

‘மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு இருக்காது; உற்பத்தி துறைக்கு சலுகைகள் எதிர்பார்க்கலாம்’ என்பதை நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசகமாக உணர்த்தி உள்ளார்.

முழுமையான முதல் பட்ஜெட் 
மத்தியில் கடந்த மே மாதம் பதவி ஏற்றுள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முதலாவது முழு அளவிலான பட்ஜெட், அடுத்த மாதம் 28–ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது.

நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்யவுள்ள இந்த பட்ஜெட், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உற்பத்தி துறை ஊக்குவிப்பு 

இந்த நிலையில், சுவிஸ் நாட்டில் உள்ள டாவோஸ் நகரில், உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் பேசினார். மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும் அம்சங்கள் பற்றி அவர் சூசகமாக சில அம்சங்களை தெரிவித்தார்.

அப்போது அவர், ‘‘உற்பத்தி துறையை ஊக்குவிக்க வேண்டும் என்பது எங்களது செயல்திட்டத்தில் முக்கியமான அம்சம். கடந்த பட்ஜெட்டின் போது மிகக்குறைந்த கால அவகாசம்தான் இருந்தது. இருப்பினும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை, தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலத்தை ஊக்குவிக்கும் அறிவிப்புகளை தந்தோம். இந்த துறைகள் முன்னேற்றம் காண வேண்டும் என்று கருதுகிறோம். எனவே எங்கள் செயல்திட்டத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம்’’ என குறிப்பிட்டார்.

எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்
தொடர்ந்து அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் சூடு பிடித்து வருகின்றன. வருவாயைப் பெருக்கும் அரசின் திறனும் மேம்படும். வரி வீதங்களை உயர்த்துவதற்கு நான் ஆதரவானவன் அல்ல. அது உற்பத்தி துறையில் எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்’’ என கூறினார்.எனவே மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வுகள் பெரிதான அளவு இருக்காது, உற்பத்தி துறைக்கு சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி 

நேற்று நடந்த உலக பொருளாதார மன்ற அமர்விலும் அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘‘கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, இந்தியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. நாங்கள் மீண்டும் உயர்ந்த வளர்ச்சி வீதத்தை எட்டிப்பிடிக்க வாய்ப்புகள் உண்மையிலேயே இருக்கின்றன’’ என கூறினார்.

வரிகள் பற்றி அவர் பேசுகையில், ‘‘அர்த்தமற்ற விதத்தில் வரி விதிப்புகளுடன் நான் வர மாட்டேன். அது எங்களுக்கு கெட்ட பெயரைத்தான் தரும். நான் கூற விரும்புகிற செய்தி, எங்கள் ஆட்சியில் வரி விதிப்பு ஸ்திரமாக இருக்கும் என்பதுதான்’’ என குறிப்பிட்டார்.

மானியங்கள் 

மானியங்களைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘ஜனவரி 1–ந் தேதி முதல் நாங்கள் ஒரு புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறோம் (கியாஸ் மானியத்தை நேரடியாக வழங்குதல்). அதில் மானியங்கள் தவறான வழியில் போவதை தடுத்து நிறுத்தப்படும். ஒட்டுதொத்த மானிய செயல்பாடுகளை மாற்றி சீர் செய்ய உள்ளோம். ஆனால் அது மிக நீண்ட பயணம்’’ என கூறினார்.

டெல்லி தேர்தலில் வெற்றி பெற ஆம் ஆத்மிக்கு தனியார் டிவி சேனல் உதவுகிறது: அமித் ஷா குற்றச்சாட்டு

பாட்னா, 

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு தனியார் ஹிந்தி டிவி சேனல் உதவி செய்து வருகிறது. அந்த சேனலில் வரும் செய்திகளை எச்சரிக்கையாக கவனியுங்கள் என பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க. தலைவர் அமித் ஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- 

டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் போது ஆம் ஆத்மியை மக்களிடத்தில் முழுவீச்சில் கொண்டு செல்லவும், தேர்தலில் வெற்றி பெற வைப்பதாகவும் அந்த தனியார் ஹிந்தி டிவி சேனல் உறுதி பூண்டுள்ளது... இதைவிட யெல்லோ ஜர்னலிசத்திற்கு ஒரு பெரிய உதாரணம் இருக்க முடியாது. நான் மக்கள் எந்த சேனலை பார்க்க வேண்டும் என நிர்பந்தப்படுத்தவில்லை. என்னுடைய கருத்தை சொன்னேன். அதை எடுத்துக் கொள்வதும், கொள்ளாததும் மக்களின் விருப்பம். கிரண்பேடியை டெல்லி தேர்தலுக்காக விலைக்கு வாங்கியதாக கேள்விகள் கேட்கின்றனர். பா.ஜ.க. எப்போதுமே பிரபலங்களை கட்சியில் இணைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த பிரபலங்கள் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களாக இருப்பர். அந்த வகையில்தான் கிரண்பேடி கட்சியில் இணைந்திருக்கிறார். ஆனால், கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியை கட்சியில் சேர்ப்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எங்கள் கட்சி தரப்பிலிருந்து ஏற்கனவே இதுபற்றி தலைவர் சித்தார்த்நாத் சிங் தெளிவுபடுத்தியிருக்கிறார். 

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார். 

பாகிஸ்தானில் உள்ள அனைவரும் தீவிரவாதிகள் அல்ல: ராஜ்நாத் சிங் பரபரப்பு பேட்டி

ஹரித்துவார், 

பாகிஸ்தானில் தீவிரவாதத்திற்கு எதிராக ஒவ்வொரு நாளும் கண்டன குரல்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அங்கு அடுத்தடுத்து வரும் அரசுகள் தீவிரவாதத்தை ஒடுக்க தவறிவருவதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி, ஹரித்துவாரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- 

பாகிஸ்தானில் வாழும் ஒவ்வொருவரையும் நான் தீவிரவாதிகளாக நினைக்கவில்லை. அந்த நாட்டிலும் தீவிரவாதத்திற்கு எதிராக குரல்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அங்கு அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் அரசுகளின் நிலைப்பாடு தெளிவில்லாமல் உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் எல்லைப்பகுதியில் அத்துமீறிய அண்டை நாடான பாகிஸ்தானுக்கு இந்தியா நல்ல பதிலடியை கொடுத்திருக்கிறது. பாகிஸ்தான் விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி சரியாகவே கையாள்கிறார். ஒவ்வொரு அடிக்கும் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடியை இந்தியா கொடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு இப்போது அமெரிக்காவும் கூட எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பாகிஸ்தான் தொடர்ந்து அமெரிக்காவின் நெருக்கடியில் இருப்பதை ஒபாமா விரும்பவில்லை. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறுவதையும் அவர் விரும்பவில்லை. இந்தியாவின் விருந்தோன்மை பற்றி உலகத்திற்கே தெரியும். நாளை இந்தியாவுக்கு வரும் ஒபாமாவும் இதை புரிந்து கொள்வார்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார். 

லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த வீட்டை ரூ.35 கோடிக்கு வாங்குகிறது மராட்டிய அரசு

மும்பை, 

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் லண்டனில் இருந்தபோது தங்கியிருந்த வீட்டை மராட்டிய அரசு ரூ.35 கோடி செலவு செய்து வாங்க முன் வந்துள்ளது. 

ஏற்கனவே, இம்மாதம் 10-ந்தேதி இதுசம்பந்தமாக மும்பை பா.ஜ.க. தலைவர் ஆஷிஷ் செலார் நிதிமந்திரி அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியிருந்தார். 'லண்டனிலுள்ள அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை வாங்குவதற்கு பிரதமர் மோடி வழிவகை செய்ய வேண்டும். இது அம்பேத்கரை பின்பற்றும் மக்களின் உணர்வுகள் சார்ந்த விஷயம் என்பதால் விரைவில் அந்த வீட்டை வாங்க வழி செய்ய வேண்டும்.' என அதில் வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில், 2,050 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள 3 அடுக்கு மாடிகள் கொண்ட அந்த வீட்டை ரூ.35 கோடி செலவில் வாங்க மராட்டிய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, டாவோஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மராட்டிய கல்வி மந்திரி வினோத் தாவ்டே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'வரும் ஏப்ரல் 14-ந்தேதி அம்பேத்கரின் பிறந்த நாள் முதல் அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த வீடு லண்டனில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும்.' என்றார். 

மராட்டிய அரசின் இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, முன்னாள் முதல்வர் பிரிதிவ்ராஜ் சவான், பிரகாஷ் அம்பேத்கர் தலைவர் பாரிப் பகுஜன் மகாசங் மற்றும் பல்வேறு தலித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். 

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மனைவி மிச்செல்லுடன் ‘ஏர்போர்ஸ்-1’ விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்

மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வரும் அமெரிக்கா அதிபர் ஒபாமா.  அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள விமான நிலைய தளத்தில் ஏர்போர்ஸ் -1 விமானம் மூலம் இந்தியாவிற்கு புறப்பட்டார். அவருடன் மனைவி மிட்செல்ஒபாமாவும் வருகின்றார்.

ஜெர்மனி வழியாக வரும் சிறப்பு விமானம் நாளை காலை 10 மணிக்கு இந்தியா வந்தைடைவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்தியா வரும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன், அவரது உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என சுமார் 2 ஆயிரம் பேர் கொண்ட குழுவினரும் வருகின்றனர். 

ஒபாமாவின் வருகையையொட்டி குடியரசு தினவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணியுடன் அந்த அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடும் என்றும், அதன்பிறகு அங்கு யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் மத்திய ஊழியர் நலம் மற்றும் பயிற்சி துறை அறிவித்து உள்ளது. 

குடியரசு தினத்தன்று நடைபெறும் அணிவகுப்பில், பிரதமர் மோடியின் அபிமான திட்டங்களான தூய்மை இந்தியா திட்டம், கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், நேரடி மானிய திட்டம் ஆகியவற்றை விளக்கும் அலங்கார ஊர்திகள் இடம் பெறுகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தை விளக்கும் வகையில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் மறைவு

சென்னை, 

1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் (90) உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி இன்று மறைந்தார். அன்னாரது மறைவு தமிழ் திரையுலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கம் கிராமத்தில் 1925-ஆம் ஆண்டு பிறந்தவர் வி.எஸ். ராகவன். வைரமாலை திரைப்படத்தின் மூலம் கடந்த 1954-ம் ஆண்டு திரையுலகத்தில் அறிமுகமான இவர் அதுவரை 1000-த்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, குணச்சித்திர வேடங்களில் இவரது புகழ் என்றும் அழியாதவை. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் முதல் இப்போதைய அஜித், விஜய், விமல் வரை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். சென்னை தி.நகரில் வசித்து வந்த வி.எஸ்.ராகவன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

உற்பத்தி துறைக்கு சலுகைகள் எதிர்பார்க்கலாம் மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு இருக்காது? நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசகம்

டாவோஸ், 

‘மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு இருக்காது; உற்பத்தி துறைக்கு சலுகைகள் எதிர்பார்க்கலாம்’ என்பதை நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசகமாக உணர்த்தி உள்ளார்.

முழுமையான முதல் பட்ஜெட் 
மத்தியில் கடந்த மே மாதம் பதவி ஏற்றுள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முதலாவது முழு அளவிலான பட்ஜெட், அடுத்த மாதம் 28–ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது.

நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்யவுள்ள இந்த பட்ஜெட், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உற்பத்தி துறை ஊக்குவிப்பு 

இந்த நிலையில், சுவிஸ் நாட்டில் உள்ள டாவோஸ் நகரில், உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் பேசினார். மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும் அம்சங்கள் பற்றி அவர் சூசகமாக சில அம்சங்களை தெரிவித்தார்.

அப்போது அவர், ‘‘உற்பத்தி துறையை ஊக்குவிக்க வேண்டும் என்பது எங்களது செயல்திட்டத்தில் முக்கியமான அம்சம். கடந்த பட்ஜெட்டின் போது மிகக்குறைந்த கால அவகாசம்தான் இருந்தது. இருப்பினும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை, தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலத்தை ஊக்குவிக்கும் அறிவிப்புகளை தந்தோம். இந்த துறைகள் முன்னேற்றம் காண வேண்டும் என்று கருதுகிறோம். எனவே எங்கள் செயல்திட்டத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம்’’ என குறிப்பிட்டார்.

எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்
தொடர்ந்து அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் சூடு பிடித்து வருகின்றன. வருவாயைப் பெருக்கும் அரசின் திறனும் மேம்படும். வரி வீதங்களை உயர்த்துவதற்கு நான் ஆதரவானவன் அல்ல. அது உற்பத்தி துறையில் எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்’’ என கூறினார்.எனவே மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வுகள் பெரிதான அளவு இருக்காது, உற்பத்தி துறைக்கு சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி 

நேற்று நடந்த உலக பொருளாதார மன்ற அமர்விலும் அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘‘கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, இந்தியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. நாங்கள் மீண்டும் உயர்ந்த வளர்ச்சி வீதத்தை எட்டிப்பிடிக்க வாய்ப்புகள் உண்மையிலேயே இருக்கின்றன’’ என கூறினார்.

வரிகள் பற்றி அவர் பேசுகையில், ‘‘அர்த்தமற்ற விதத்தில் வரி விதிப்புகளுடன் நான் வர மாட்டேன். அது எங்களுக்கு கெட்ட பெயரைத்தான் தரும். நான் கூற விரும்புகிற செய்தி, எங்கள் ஆட்சியில் வரி விதிப்பு ஸ்திரமாக இருக்கும் என்பதுதான்’’ என குறிப்பிட்டார்.

மானியங்கள் 

மானியங்களைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘ஜனவரி 1–ந் தேதி முதல் நாங்கள் ஒரு புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறோம் (கியாஸ் மானியத்தை நேரடியாக வழங்குதல்). அதில் மானியங்கள் தவறான வழியில் போவதை தடுத்து நிறுத்தப்படும். ஒட்டுதொத்த மானிய செயல்பாடுகளை மாற்றி சீர் செய்ய உள்ளோம். ஆனால் அது மிக நீண்ட பயணம்’’ என கூறினார்.

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது உண்மையான கவுரவம்: வெள்ளை மாளிகை பெருமிதம்

வாஷிங்டன்,

இந்திய குடியரசு தினவிழாவில் அமெரிக்க  ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டு   குடியரசு தின விழா அணிவகுப்புகளை பார்வையிடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அவருக்கு அளிக்கபட்டுள்ள மிகப்பெரும் கவுரம் என்று வெள்ளை  மாளிகை தெரிவித்துள்ளது. 

இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக நாளை இந்தியா வருகை தரவுள்ளார். அவரது வருகையையொட்டி டெல்லி முழுவதும் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையையொட்டி வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோஷ் ஏர்னஸ்ச் தனது வழக்கமான செய்தி சந்திப்பின் போது தெரிவித்தார். அப்போது அவர்கூறியதாவது:-”

 இந்த சுற்றுப்பயணத்தை அதிபர் ஒபாமா மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்.குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது அவருக்கு அளிக்கப்பட்ட உண்மையான கவுரவம். குடியரசு தினவிழா அணிவகுப்புகளை நேரிடையாக பார்வையிட அங்கு பயணம் மேற்கொள்வதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார். இந்தியாவில் அரசியல் தலைவர்களுடன் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள சந்திப்பையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்”  என்று தெரிவித்துள்ளார்.

 இதுவரை எந்தவொரு நாட்டின் தேசிய விழா கொண்டாட்டத்திலும் ஒபாமா பங்கேற்றதில்லை. இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வது தான் ஒபாமா முதல் முறையாக கலந்து கொள்ளும் வெளிநாட்டு தேசிய விழா என்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத்தில் அபாயாகரமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட 200 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

ஐதாராபாத்,

ஐதாராபாத்தில் இன்று அதிகாலை நடந்த சோதனையில் 200 குழந்தை தொழிலாளர்களை போலீசார் மீட்டுள்ளனர். அதில் சில குழந்தைகள் 6 வயதுக்கும் குறைந்தவர்கள் என்பதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஐதராபாத் நகரைசுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை , சட்டவிரோத நிதி பரிவர்த்தனை மற்றும் கிரிமினல் வழக்கு தொடர்புடையவர்களை கண்டறிவதற்காக   போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சுமார் 500 போலீசார் ஈடுபட்டு இருந்தனர். பவானி நகர் என்ற இடத்தில் அவர்கள் சோதனை மேற்கொண்டிருந்த போது அங்கிருந்த ஒரு கட்டிடம் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த  சுமார் 200 குழந்தை தொழிலாளர்களை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுகாதரமற்ற நிலையிலும் உடலில் காயத்தழும்புகளுடன் இருந்த அந்த குழந்தைகளை உடனடியாக மீட்டனர். 

மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் வளையல் தயாரித்தல் தோல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் பிற அபாயாகரமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  பீகார் மற்றும் உத்தரபிரேதேச மாநிலத்தை சேர்ந்த இந்த குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் ரூ 20 ஆயிரம் கொடுத்து வேலைக்கு அழைத்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளை அழைத்து வந்த யாசின் பெகல்வான் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

ஒடிசாவில் ரெயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் குண்டுவைத்து தகர்த்தனர்: ரெயில் சேவைகள் பாதிப்பு

ராயகாதா,

ஒடிசா மாநிலத்தின் ரயாகதா மாவட்டத்தில்  விசாகப்பட்டினம்-ராய்பூர் செல்லும் ரெயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்த்தனர். இதனால் ரெயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுகள் மூலம் மாவோயிஸ்டுகள் இந்த தாக்குதலை நட்ந்த்தியுள்ளனர். இதனால் முனிகவுடா ரெயில் நிலையத்துக்கு அருகே  ஒரு மீட்டர் நீளத்துக்கு தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் ரெயில்வே ஊழியர் லேசான காயம் அடைந்துள்ளார். தண்டவாளம் சேதம் அடைந்துள்ளதால் அதிகாலை முதல் அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 6-க்கும் மேற்பட்ட ரெயில்கள் முனிகவுடா மற்றும் ராயகதா ரெயில்வே நிலையங்களில் அப்படியே நிறுத்தபட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர். 

சம்பவம் நடைபெற்ற இடத்தில் பேனர் ஒன்றை கட்டியிருந்த மாவோயிஸ்டுகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். அந்த பேனரில் அமெரிக்க அதிபர் ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடத்தியாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Total Pageviews

Popular Posts

Blog Archive