Tuesday 20 January 2015

சென்சார் போர்டில் உறுப்பினராகிறார் நடிகர் எஸ்.வி.சேகர்: புதிய தலைவராக படத்தயாரிப்பாளர் பஹ்லஜ் நிகலானி தேர்வு

புதுடெல்லி,

திரைப்படங்களை தணிக்கை செய்யும் மத்திய சென்சார் போர்டு மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சென்சார் போர்டு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்டு வருவது வழக்கம்.

சென்சார் போர்டின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த லீலா சாம்சன் பதவி வகித்து வந்தார். இந்தியில் உருவாகியுள்ள 
'மெஸஞ்சர் ஆஃப் காட்' என்ற படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய சென்சார் போர்டு மறுத்து விட்டது. ஆனால், தீர்ப்பாயம் அனுமதியை வழங்கியது. இந்நிலையில், அதிருப்தி காரணமாக லீலா சாம்சன் சென்சார் போர்டு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து 8 உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். 

இந்நிலையில், சென்சார் போர்டின் புதிய தலைவராக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பஹ்லஜ் நிகலானி நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விபரம் வருமாறு:- 

வாணி திரிபாதி டிக்கோ (பா.ஜ.க. தலைவர்)
அசோக் பண்டிட் (திரைப்பட தயாரிப்பாளர்)
சந்திர பிரகாஷ் திவிவெதி (திரைப்பட தயாரிப்பாளர்)
மிகிர் புத்தா (திரைக்கதை எழுத்தர்)
சையது அப்துல் பாரி
ரமேஷ் பதான்ஜே
ஜார்ஜ் பேக்கர் (நடிகர்)
ஜீவிதா (நடிகர், படத்தயாரிப்பாளர்)
எஸ்.வி.சேகர் (நடிகர்)

சினிமா படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive