Thursday 22 January 2015

லஞ்ச வழக்கில் கைதான வருமான வரித்துறை இணை ஆணையர் ஜாமீன் மனு தள்ளுபடி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவு

சென்னை, 
சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றியவர் சலோனி யாதவ். இவர், தனியார் கட்டுமான நிறுவனத்தின் வருமான வரிக்கணக்கை சரிசெய்து தருவதாக கூறி ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கடந்த 12–ந் தேதி சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், இவருக்கு உதவியதாக ஹித்தேஷ், சஞ்சய் பண்டாரி, ஸ்பேரயா பண்டாரி ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று சென்னை மாவட்ட சி.பி.ஐ. சிறப்பு முதன்மை கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி, அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive