Monday 19 January 2015

உ.பி.யில் கோரம்: மூன்று குழந்தைகளை தீயிட்டு எரித்து தாயும் தற்கொலை

உ.பி.யில் கோரம்: மூன்று குழந்தைகளை தீயிட்டு எரித்து தாயும் தற்கொலைலக்னோ, ஜன.19-

உத்தரப்பிரதேசம் மாநிலம், அசாம்கர் மாநிலத்தில் இன்று பெற்ற தாயே தனது 3 குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து எரித்துவிட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கோரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபரீத முடிவுக்கு இன்று தள்ளப்பட்ட சுனிதா (28) என்ற அந்தப் பெண் தனது குழந்தைகள் அமித் (1), ஆதித்யா (3), தீக்சித் (5) ஆகியோரின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி மனம் பதறாமல் தீ வைத்தார். குழந்தைகள் வேதனையில் அலறித்துடித்தபோது, தனது உடலிலும் அவர் தீ மூட்டிக் கொண்டார்.

இதில் சுனிதா மற்றும் அமித், ஆதித்யா ஆகிய மூவரும் பலியாகினர். தீக்சித் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive