Thursday 22 January 2015

தேசிய பாரம்பரிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காஞ்சீபுரத்தை மேம்படுத்த ரூ.23 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி,
இந்தியாவில் உள்ள கலாசார பாரம்பரியம் மிக்க நகரங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தேசிய பாரம்பரிய மேம்பாட்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், இந்த திட்டத்தை நகர்ப்புற அபிவிருத்தி துறை மந்திரி வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக வாரணாசி, மதுரா, அமிர்தசரஸ், பாதாமி உள்ளிட்ட 12 நகரங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த நகரங்களை மேம்படுத்த மொத்தம் ரூ.500 கோடி ஒதுக்கப்படுவதாகவும் அப்போது அவர் அறிவித்தார். ஒவ்வொரு நகரத்துக்கும் ஒதுக்கப்பட்ட தொகைக்கான கடிதத்தை வழங்கிய வெங்கையா நாயுடு, ஒதுக்கப்பட்ட தொகை அடுத்த 2 ஆண்டுகளுக்கு செலவிடப்படும் என்றும் கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம், வேளாங்கண்ணி ஆகிய நகரங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன. காஞ்சீபுரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.23 கோடியே 4 லட்சமும், வேளாங்கண்ணியை மேம்படுத்த ரூ.22 கோடியே 26 லட்சமும் வழங்கப்பட்டு உள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive