Thursday 22 January 2015

நடிகர் ஜெயராம் கலந்து கொண்ட விழாவில் வாலிபர் போலீசுடன் மோதல்

கோழிக்கோடு

கேரள மாநிலம்  கோழிக் கோடு அருகே உள்ள  இஞ்சோடி  என்ற இடத்தில் பள்ளி மாணவர்கள் இடையே கலை நிகழ்ச்சிகள்  தொடர்பான போட்டிகள்  நடந்தன.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. முதல் பரிசு   பெறும் பள்ளிக்கு 117 பவுன் தங்க கோப்பை பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கேரள கல்வி  மந்திரி அப்துரப் உள்பட கல்வி அதிகாரிகள் பலர் கலந்து  கொண்டனர். ஏராளமான மாணவ-மாணவிகளும் திரண்டு  இருந்தனர். மந்திரி அப்துரப் விழாவில் மாணவர்களை பாராட்டி பசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு வாலிபர்  கையில் கறுப்பு கொடியுடன் கோஷம் போட்டபடி விழா மேடை அருகே வந்தார்.

பிறகு அவர் மேடை மீது ஏறி பாய்ந்து  கல்வி மந்திரியை நோக்கி செல்ல முயன்றார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கோபகுமார் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தார். இதனால் விழாமேடையில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. மற்ற போலீசார் உதவியுடன்   அந்த    வாலிபரை  போலீஸ் வேனில் ஏற்றிச்சென்றனர். போலீஸ் நிலையத்தில் நடந்த விசாரணையில் அவர் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. இயக்கத்தை சேர்ந்தவர்  என்பது தெரிய வந்தது. அவர் எதற்காக கறுப்பு கொடியுடன்  விழா மேடைக்கு சென்றார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive