Thursday 22 January 2015

'பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் என்ற பேச்சே இல்லை' -நிதிமந்திரி அருண் ஜெட்லி

புதுடெல்லி

ஊழலை கட்டுப்படுத்த சிறந்த முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை குறிப்பிட்டுள்ள மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, பிரதமர் மோடி ஆட்சிக்குவந்த பின்னர் ஊழல் என்ற பேச்சே இல்லை என்று கூறியுள்ளார். 

இந்திய தொழில் கூட்டமைப்பு - பாஸ்டன் கன்சல்டிங் குரூப் காலை சிற்றுண்டி கூட்டத்தில்,  மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி பிரதமர் நரேந்திர மோடி உருவாக்க விரும்பும் இந்தியா என்ற தலைப்பில் பேசினார். 

செய்யும் வணிகத்தின் செலவு மதிப்பை மட்டும் ஊழல் அதிகரிக்கவில்லை, நாட்டின் நம்பகத்தன்மையும் பாதிக்கும், ஊழலால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ள அருண் ஜெட்லி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, புதிய சட்டங்கள் மூலம் இது போன்ற சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகிறது என்று கூறினார். 

ஐரோப்பிய நிறுவனத்தின் சி.இ.ஒ. ஒருவர் ஊழல் காரணமாக இந்தியாவில் தொழில் தொடங்கும் முயற்சியையே கைவிட்டதாக தன்னிடம் கூறியதாக மற்றொரு வெளிநாட்டு முதலீட்டாளர் கூறியதற்கு பதில் அளித்துள்ள மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி,

நான் எந்த ஜெண்டில்மேனையும் குறை கூறவில்லை, நாங்கள் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதால் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ஊழல் என்பது செய்யும் வணிகத்தின் செலவு மதிப்பை மட்டும் அதிகரிக்காது. நாட்டின் நம்பகத்தன்மையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். என்று கூறினார். இது தொடர்பான நிறைய குழப்பங்களை நாம் தீர்க்க வேண்டும்.

ஊழல் அடிப்படையில் ஒரு திட்டதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது எனென்றால் இந்தியாவில் வலுவான நீதித்துறை உள்ளது. தற்போதைய காலங்களில் முக்கிய ஊழல் வழக்குகள் இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக வந்திருக்கின்றன, ஆனால் அரசு புதியசட்டங்கள் மூலம் இதுபோன்ற சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகிறது. தொழில் தொடங்குவதற்கு அனுமதி வழங்குவதில் ஊழல் நிலவியிருந்தது, இதனை கட்டுப்படுத்தும் விதிகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில், இந்தியாவில் ஊழல் என்ற பேச்சே இல்லை. என்று நிதிமந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive