Saturday 24 January 2015

ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளும் ஆதாருடன் இணைக்கப்படும்: பிரதமர் மோடி

புதுடெல்லி,

ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளும்  ஆதாருடன் இணைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ஜன் தன் யோஜனா திட்டத்தை செயல்படுத்துவதில் தனித்துவமான சேவையை புரிந்த வங்கி ஊழியர்களை பாராட்டி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள 
பிரதமர் நரேந்திர மோடி, 99.74 சதவீத குடும்பத்தினர் இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கை துவங்கிவிட்டதாகவும் நிர்ணையிக்கபட்ட இலக்கை விட 
இந்த எண்ணிக்கை தாண்டியுள்ளதாகவும் மேலும் பல திட்டங்களில் நேரடியாக பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதை விரிவு படுத்துவதை 
அரசு உறுதிப்படுத்தும் என்று தெரிவித்தார். 

வங்கி ஊழியர்களுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் உங்களின் அசாதாரண உழைப்பை பார்க்கையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டம்  26 ஜனவரி 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்ற நிர்ணையிக்கப்பட்டிருந்த  இலக்கை விட கடந்துள்ளது. மிக குறுகிய காலத்திற்குள் 11.5 கோடி புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 99.4 சதவீத குடும்பத்தினரை இந்த திட்டம் இணைத்துள்ளது. உங்களின் தனித்துவமான உழைப்பிற்காக  உங்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆதார் கார்டுடன் ஓவ்வொருடைய வங்கி கணக்கு எண் பதிவு செய்வதை உறுதிப்படுத்த நீங்கள் உழைக்க வேண்டும். இது அனைத்து வங்கி கணக்கு எண்ணுக்கும் செயல்படுத்த வேண்டும். வங்கி கணக்கு தொடங்குவதில் காட்டிய  அதே ஆர்வத்தோடு   இதிலும் நீங்கள் முனைப்புடன் செயல்படுவீர்கள் என நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

பிரதம மந்திரி ஜன் தன் யோஜ்னா' என்ற பெயரில், வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்க வகை செய்யும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கி வைத்தது நினைவு கூறத்தக்கது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive