Saturday 24 January 2015

முன்னாள் பிரதமர்கள் பற்றிய கருத்து சர்ச்சைக்குள்ளானது பற்றி பேச மனோகர் பாரிக்கர் மறுப்பு

பானஜி,

முன்னாள் பிரதமர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், இது பற்றி கருத்து கூற மனோகர் பாரிக்கர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து இந்திய எல்லைக்குள் சிறிய ரக கப்பல் ஊடுருவ முயற்சித்து, பின்னர் அதனை வெடிக்க செய்தது தொடர்பாக மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசினார். அப்போது,  நாட்டின் பாதுகாப்பு அம்சங்களில் முன்னாள் பிரதமர்கள் சிலர் சமரசம் செய்து கொள்ளும் வகையில் செயல்பட்டதாக கூறி பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் குற்றம்சாட்டினார். எனினும், அவர்களது பெயர்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

மனோகர் பாரிக்கரின் இந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு பாரிக்கர் ஆதரங்கள் சமர்பிக்க வேண்டும் இல்லையென்றால் பொது மன்னிப்பை கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியிருந்தது.   இந்த நிலையில், பானஜியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் சித்தார்த் சுன்கொலியென்கர் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன்  மனோகர் பாரிக்கரும்  சென்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மனோகர் பாரிக்கரிடம், நிருபர்கள்  சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினார். ஆனால் எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் மவுனமாக மனோகர் பாரிக்கர் சென்றுவிட்டார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive