Thursday 22 January 2015

உலகம் முழுவதும் பெண் குழந்தைகளே கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்: ஆய்வில் தகவல்

லண்டன், 

பெண்களுக்கு சுதந்திரம் அதிகளவில் இல்லாத நாடுகளில் ஒரு விசித்திரமான ஆய்வு நடத்தப்பட்டது. உலகளவில் கல்வியில் சிறந்து விளங்குவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் இடைவெளி அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. கிளாஸ்கோ மற்றும் மிசௌரி பல்கலைக்கழகங்களில் உள்ள உளவியல் நிபுணர்கள் 15 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகளிடம் ஒரு மிகப்பெரிய ஆய்வை நடத்தினர். 

அதில், கணிதம், புத்தகம் வாசித்தல், அறிவியல் போன்றவற்றில் ஆண் குழந்தைகளை விட பெண்களே சிறந்து விளங்குவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, அரசியல் பொருளாதார ரீதியில் நல்ல உயர்ந்த நிலையில் இருக்கும் நாடுகளிலும் கூட இந்த வித்தியாசம் இன்னும் இருக்கிறது. பெண்களுக்கு சம உரிமைகள் மறுக்கப்படும் கத்தார், ஜோர்டான், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளிலும் கூட பெண்களே கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். 

கொலம்பியா, கோஸ்டா ரிகா, இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே ஆண்கள் பெண்களை விட கல்வியில் சிறந்து விளங்குவதாக இந்த ஆய்வு கூறுகிறது. ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவருமே கல்வியில் சிறந்து விளங்குவதாகவும், அதில் எந்தவித இடைவெளியும் இல்லை என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive