Saturday 24 January 2015

காஷ்மீரில் கடும் குளிர் வாட்டிவதைப்பு: கார்கில் பகுதியில் மைனஸ் 17 டிகிரிக்கு சென்றது வெப்ப நிலை

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பொதுவாக  கடும் குளிர் நிலவுவது வாடிக்கை. இந்தியாவின் பிற மாநிங்களைவிட இங்கு குளிர்அதிகமாகவே இருக்கும். கார்கில் பகுதியில் இதுவரை இல்லாதவிற்கு மைனஸ் 17 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு குளிர் நிலவுகிறது.

இந்த பகுதி முழுவதும் உறைபனியால் சூழ்ந்துள்ளது.லே பகுதியில் 14.4 டிகிரி செல்சியஸ் என்ற அளிவில் குளிர் நிலவுகிறது. ஸ்ரீநகர் நகரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடை கால தலைநகராகும். இங்கு 0.8 டிகிரி என்ற அளவிற்கு குளிர் நிலவுகிறது. 

இரவு நேரங்களில் இது ஜீரோவிற்கும் கீழ் சென்றுவிடுகிறது. இதேபோல் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கடும் குளிர்நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜம்மு காஷ்மிர் வானிலை ஆய்வு மைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive