Thursday 22 January 2015

தொலை பேசி இணைப்பு வழக்கு எனக்கு எதிராக வாக்கு மூலம் வாங்க முயற்சி தயாநிதிமாறன் பேட்டி

சென்னை, 

முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் இன்று காலை 8.50 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணா நிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அவருடன் வக்கீல்கள் சண்முகசுந்த ரம், ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் தயாநிதிமாறன் நிருபர்களுக்கு பேட்டியளித் தார். அவர் கூறியதாவது:-

நான் தகவல் தொடர்பு துறை மந்திரியாக இருந்த போது எனது இல்லத்தில் சட்டவிரோதமாக தொலை பேசி இணைப்பு கொடுக்கப் பட்டதாகவும், இதனால் ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்ட தாகவும் சி.பி.ஐ., எப்.ஐ.ஆர். பதிவு செய்து இருக்கிறது. 

8 ஆண்டுகளாக இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் எனது உதவியாளராக இருந்த கவுதமன் மற்றும் சன் டி.வி. ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகிய 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் விசித்திரம் என்னவென் றால் இந்த 3 பேரும் கடந்த 18 மாதங்களாக சி.பி.ஐ. அழைக்கும் போதெல்லாம் டெல்லிக்கும் சென்னைக்கு மாக அலைந்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தனர். 

10 முறைக்கு மேல் டெல்லி சென்றுள்ளனர். ஆனால், நேற்று திடீர் என அவசர அவசரமாக அவர்களை அழைத்து, அடித்து துன்புறுத்தி கைது செய்துள்ளனர். 
எனக்கு எதிராக வாக்கு மூலம் கொடுத்தால் விட்டு விடுவதாகவும் கூறி, வாக்கு மூலம் பெற வற்புறுத்தி உள்ளனர். 3-ம்தர  நடவடிக்கை போல் அவர் களை நடத்தி இருக்கிறார்கள். இது பழிவாங்கும் நடவடிக்கை யாரையோ திருப்திப்படுத்த சி.பி.ஐ. இப்படி நடந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். அறிவு ஜீவியை திருப்தி படுத்தும் நோக்கில் சி.பி.ஐ. நடந்திருக்கிறது. 

அவர்கள் சொல்வது போல் எனக்கும் சன் டி.வி.க்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது வீட்டில் 300 தொலைபேசி இணைப்பு இருந்ததாக கூறுவது தவறு. அது போன்று எந்த இணைப்பும் இல்லை. ஒரே ஒரு ஐ.எஸ்.டி. இணைப்புதான் உள்ளது. நான் மத்திய மந்திரியாக பதவி வகித்த காலம் முதல் இன்று வரை அந்த இணைப்பு தான் செயல்பட்டுக் கொண் டிருக்கிறது. அதில் ஈ.பி. மீட்டர் போல் மீட்டர் உள்ளது. பேசப்படும் விவரம் அனைத்தும் அதில் பதிவாகி இருக்கும் எப்போது வேண்டு மானாலும் அதை பார்க்க முடியும். 

எனவே இது குறித்து சி.பி.ஐ. டைரக்டருக்கு கடிதம் எழுத இருக்கிறேன். இதுபோல் சி.பி.ஐ. கைது நடவடிக்கைக்கு ஆளான 3 பேரின் மனைவிமாரும் மனித உரிமை கமிஷனுக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்கள். சட்டத்துக்கு விரோத மாக தாங்கள் துன்புறுத்தப் படுவதாக அதில் குறிப்பிட் டுள்ளனர். சி.பி.ஐ.யின் இந்த திடீர் நடவடிக்கையை பார்க்கும் போது தமிழ்நாட்டில் ஏதோ ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவரை திருப்திபடுத்த வேண்டிய கட்டாயத்தில் சி.பி.ஐ. செயல்படுவதாக அச்சம் நிலவுகிறது. 

எனது வீட்டில் இருந்து பேசப்பட்ட தொலைபேசி கட்டணம் ரூ.7 லட்சம்தான். அந்த தொகையை கட்ட தயாராக இருப்பதாக நான் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். எனது வீட்டில் தொலைபேசி இணைப்பகம் (எக்சேஞ்ச்) இருந்ததாக ஏதேதோ கூறுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை ‘இண்டர்காம்’ மட்டும் தான் உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive