Thursday 22 January 2015

நிலம் கையகப்படுத்துதல் திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பிப்ரவரி 3–ந் தேதி சட்டநகல் எரிப்பு போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை, 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்கள் வே.துரைமாணிக்கம், பெ.சண்முகம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, விவசாயிகளிடம் இருந்து கட்டாயப்படுத்தி நிலத்தை பறிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்துதல் திருத்த சட்டம் 2014–ஐ அவசர சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தி உள்ளது.
தொழில் வளர்ச்சி, குடியிருப்பு, அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கு அரசே நிலத்தை கையகப்படுத்தி வழங்கும் இச்சட்ட திருத்தம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்களின் நலன்களை பாதுகாக்க அரசு முனைப்புடன் செயல்படுவதை காட்டுகிறது.
மத்திய அரசின், விவசாயிகளுக்கு விரோதமான இந்த நடவடிக்கையை கண்டித்தும், திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் சட்ட நகல் எரிப்பு போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கங்கள் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன.
இதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில், பிப்ரவரி 3–ந் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் கூட்டாக முடிவெடுத்து உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive