Thursday 22 January 2015

இந்தியாவில் விமான எரிபொருளை விட பெட்ரோல் விலை அதிகம்

இந்தியாவில் ஒருவேளை முதன் முதலாக சாதாரண பெட்ரோல் விலை, ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் என்று அழைக்கப்படும் விமான பெட்ரோலின் விலையை விட விலை அதிகமாகி இருக்கலாம். மத்திய அரசு தொடர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் மீதான கலால் வரி வரியை உயர்த்தியது காரணமாக இந்தியாவில் விமான எரிபொருளை விட பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. 

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 58.91 ஆக உள்ளது. ஆனால் பெட்ரோலை விட அதிக ஆக்டேன் கொண்ட ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் என்ற விமான பெட்ரோலின் விலை ரூ. 52.42 மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. விமான எரிபொருளைவிட தரத்தில் குறைவான, சாதாரண பெட்ரோலின் விலை உயர்வாக இருப்பதற்கு காரணம், மத்திய அரசு தொடர்ந்து 4 முறை பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை உயர்த்தியது ஆகும். பெட்ரோல் மீதான உற்பத்தி வரி 4 முறை அதிகரிக்கப்பட்டதால் லிட்டருக்கு மொத்தம் ரூ. 7.75 அதிகரித்துள்ளது. இதன்மூலம் எப்போதும் இல்லாத வகையில் ரூ.16.95 என்று பெட்ரோலுக்கு அதிகபட்ச உற்பத்தி வரி நிலவுகிறது.

பெட்ரோலிய அமைச்சக தகவலின்படி,  2002ம் ஆண்டு ஏப்ரலில் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.10.53 ஆக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை நிர்ணயம் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. பின்னர் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.14.59 ஆக அதிகரித்தது. 2012-ம் ஆண்டு பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 9.48 ஆக குறைக்கப்பட்டது. முன்னதாக 2008ம் ஆண்டு மார்ச் மாதம் பெட்ரோல் மீதான உற்பத்திவரி அதன் உச்சபட்சமான ரூ.14,78 ஆக அதிகரிக்கப்பட்டது. 

கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின்னர் பெட்ரோல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிவு கண்டது. இதனையடுத்து பெட்ரோல் விலை 9 முறை குறைக்கப்பட்டதில் மொத்தமாக லிட்டருக்கு ரூ. 14.69 விலை குறைவு ஏற்பட்டது. இந்த விலைக்குறைப்பு இன்னும் கூட இருந்திருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து மத்திய அரசு உற்பத்தி வரியை உயர்த்தியதன் காரணமாக அது ஏற்படவில்லை. 

மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம்  12-ம் தேதி உற்பத்தி வரியை ரூ. 1.50 ஆக உயர்த்தியது, டிசம்பரில் 2-ம் தேதி வரியை ரூ. 2.25 ஆக உயர்த்தியது. ஜனவரி 2ம் தேதியும், 16-ம் தேதியும் வரியை ரூ. 2 ஆக உயர்த்தியது. நிதிநிலை பற்றாக்குறையை குறைக்க உற்பத்தி வரியை அதிகரித்தது. 

பெட்ரோலிய அமைச்சக தரவுகளின்படி, இந்த உற்பத்தி வரி உயர்வு மூலம் அரசுக்கு ரூ. 94,164 கோடி அல்லது மொத்த கலால்வரி வசூலில் 52 சதவீதம், அரசுக்கு வருவாய் கிடைத்தது என்று தெரிவிக்கின்றன. இந்த ஆண்டிலும் உற்பத்திவரி அதிகரிப்பு மூலம் அரசுக்கு ரூ.18,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive