Thursday 22 January 2015

தெலுங்கானா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் பலி

ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் நோயால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் உஸ்மானியா மத்திய ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 9 பேரும், உஸ்மானியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரும் என மொத்தம் 11 பேர் பலியானார்கள்.
மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் பரவியுள்ள அசாதாரணமான சூழ்நிலையில் முதல்–மந்திரி சந்திரசேகரராவ் நேற்று பிரதமர் நரேந்திரமோடியுடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது அவர் ‘மாநிலத்தில் பரவியுள்ள பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கிருமிகளை அழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய மருத்துவக்குழுவை உடனடியாக மாநிலத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்றும் அப்போது கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்ததாக முதல்–மந்திரி அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive