Thursday 22 January 2015

ஒபாமா வருகையையொட்டி தீவிரவாத தாக்குதல், புரளியை கிளப்பிய வாலிபர் கைது

அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையையொட்டி தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்று டெல்லி போலீசாரிடம் தொலைபேசியில் புரளியை கிளப்பிய கோவா வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

கோவா மாநிலம் தெற்கு கோவா மாவட்டத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் நேற்று இரவு 7 மணியளவில் டெல்லி போலீஸ் கண்ட்ரோல் அறைக்கு தொடர்பு கொண்டு பேசினார். அமெரிக்கா அதிபர் ஒபாமா இந்தியா வருவதையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டியுள்ளனர், இதுதொடர்பான தீவிரவாதிகளின் உரையாடலை பதிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து டெல்லி பாதுகாப்பு அமைப்புகள் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை கண்காணித்துள்ளனர். 

தொலைபேசி எண் உதவியுடன் வாலிபரை கோவா தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளபகுதியில் வாலிபரை கைது செய்தனர். வாலிபர் விளம்பரத்திற்காக இதனை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு செல்லும் வாலிபரை தொலைபேசி எண்ணை கொண்டு அடையாளம் கண்டுள்ளனர். வாலிபரை பிடித்த போலீசார் உயர்அதிகாரிகள் முன்னிலையில் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒரு விளம்பரத்திற்காக இதனை செய்ததாக வாலிபர் ஒத்துக்கொண்டார். உடனடியாக போலீசார் வாலிபரை கைது செய்தனர். 

டெல்லியில் குடியரசு தினவிழாவில் கலந்துக் கொள்ள வாலிபர் விரும்பியதாகவும், அதுமுடியாததால் இதுபோன்ற புரளியை கிளப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாலிபர் இன்று மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுகிறார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive