Thursday 22 January 2015

போதை பொருள் வழக்கில் கைதான 7 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி சிறப்பு கோர்ட்டு உத்தரவு

சென்னை, 
பூந்தமல்லி அடுத்துள்ள நசரத்பேட்டையில் ‘கேட்டமின்‘ என்ற போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி போலீசார், சந்தேகத்துக்குரிய வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது மலேசியாவை சேர்ந்த கணேஷ் என்பவர் 2 கிலோ 400 கிராம் கேட்டமின் போதைபொருள் வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர், கணேசையும், அவருக்கு உதவியாக இருந்த யோகேஸ்வரன், ஈஸ்வரன், வெங்கடேசன், மனோகரன், டெல்லிபாஸ்கர், குமார் ஆகியோரை கடந்த ஆண்டு செப்டம்பர் 25–ந் தேதி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னையில் உள்ள போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தாமல் கண்ணா, ‘மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால், அவர்கள் சாட்சிகளை கலைத்து விடுவார்கள்’ என்று எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதையடுத்து, ஜாமீன் கேட்டு 7 பேர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி வி.ராமமூர்த்தி உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive