Thursday 22 January 2015

'மன் கி பாத்' ரேடியோ உரையில் பிரதமர் மோடியுடன் ஒபாமாவும் இணைகிறார்

'மன் கி பாத்' ரேடியோ உரையில் பிரதமர் மோடியுடன் ஒபாமாவும் இணைந்து பேசுகிறார். 
 
பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற பெயரில் கடந்த அக்டோபர் 3–ஆம் தேதியன்று ரேடியோ வழியாக முதன் முறையாக உரையாடினார். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ரேடியோ வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்தமாதம் அவருடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் உரையாற்றுகிறார். குடியரசு தின விழா நிகழ்ச்சியை அடுத்து நாட்டு மக்களுக்கு இருவம் ரேடியோவில் உரையாற்றுகின்றனர். 

இதுதொடர்பாக டூவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி, கூறியிருப்பதாவது:-

இந்த மாத 'மன் கி பாத்' எபிசோட் எல்லோருக்கும் ஒரு சிறப்பான ஒன்றாக இருக்கும், நமது குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் பாரக் ஒபாமா மற்றும் நானும் இணைந்து எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறோம். 

இந்த 'மன் கி பாத்' சிறப்பு நிகழ்ச்சியில் அதிபர் பாரக் ஒபாமாவுடன் கலந்து கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன், இது வரும் ஜனவரி 27-ம் தேதி ஒளிபரப்பப்படும். அதிபர் ஒபாமாவுடனான  'மன் கி பாத்' சிறப்பு நிகழ்ச்சி உங்களுடைய பங்கேற்பு இல்லாமல் நிறைவடையாது!  #AskObamaModi என்ற டேக்கை பயன்படுத்தி உங்களுடைய கேள்விகளை வரும் 25-ம் தேதி வரையில் அனுப்புங்கள்.

விவாத நிகழ்ச்சியில் உங்களுடைய கேள்விகளை பதிவு செய்ய எனதுஅரசு உங்களுக்கு சிறப்பு வாய்ப்பை கொடுத்துள்ளது, உங்களுடைய கேள்விகளை http://mygov.in/signup இணையதளத்திலும் பதிவு செய்யலாம். இந்த 'மன் கி பாத்' சிறப்பு நிகழ்ச்சி மறக்கமுடியாததாக இருக்கும், இந்தியா - அமெரிக்கா இடையே உள்ள சிறப்பான உறவை வெளிப்படுத்தும். என்று தெரிவித்துள்ளார்.  

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive