Saturday 24 January 2015

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய பயணம் ஆக்ரா-தாஜ்மகால் நிகழ்ச்சிகள் ரத்து?

புதுடெல்லி

அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார். இந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அழைக்கப்பட்டுள்ளார். இந்திய குடியரசு தினவிழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அழைக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவையாகும். 

இந்தியா வரும் ஒபாமா 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  3 நாட்கள் நிகழ்ச்சிகளில் 27-ந்தேதி  பிற்பகல் ஒபாமா, மிச்செல் மற்றும் அமெரிக்க மந்திரிகள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள் ஆக்ரா புறப்பட்டு செல்வார்கள். அங்கு காதல் சின்னமான, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடுவார்கள். சுமார் 2 மணி நேரம் ஒபாமா அங்கு இருப்பார்.   என்றும்

தாஜ்மகாலை பார்த்து முடித்ததும் ஆக்ராவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஒபாமா அமெரிக்கா புறப்படுவார். என பயணம் திட்டமிடபட்டு இருந்தது. 

இதையடுத்து ஆக்ரா விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகால் செல்லும் 10 கி.மீ. சாலை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. . 600 தொழிலாளர்களை கொண்டு சாலையின் இருபுறமும் உள்ள தூசிகள் குப்பைகள் அகற்றபட்டு சுத்தபடுத்தபட்டது.

இதே போல் தாஜ்மகாலின் உள்ளேயும், வெளியேயும், சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.. புல் வெளிகளும் சமப்படுத்தப்பட்டு. நீரூற்றுகள் புதுப்பிக் கப்பட்டன.தாஜ்மகாலின் பின்புறம் யமுனை நதி ஓடுகிறது. இந்த நதியில் தேங்கி கிடக்கும் மாசுகளும் அகற்றபட்டது. 

தாஜ்மகாலைச் சுற்றிலும் சுற்றுலா பயணிகளை நம்பி கடை வைத்து இருந்தவர்கள் கடைகளை திறக்கக் கூடாது என்று உத்தரவிடபட்டு இருந்தது. 

ஆனால் இந்த நிலையில் தற்போது ஒபாமாவின் ஆக்ரா பயணமும் தாஜ்மகாலை சுற்றி பார்க்கும் நிகழ்ச்சியும் ரத்து செய்யபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒபாமா இந்தியாவில் இருந்து முன்னதாக கிளம்ப  வாய்ப்பு உள்ளதாகவும். இதனால் ஆக்ரா பயணம் ரத்து செய்யபட உள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive