Thursday 22 January 2015

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை: சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி,

2013–ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது.

இந்த நிலையில் 17 மாத கால விசாரணைக்கு பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 130 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை உச்ச நீதிமன்ற  நீதிபதிகள், டி.எஸ்.தாகூர், கலிபுல்லா ஆகியோர் தீர்ப்பளித்தனர், இதில், ஐபில் சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை. 

பிசிசிஐயின் ஏகாதிபத்தியத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சீனிவாசன் ஐபிஎல் அணியின் உரிமையாளராக இருப்பதில் தவறில்லை என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும், குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ்குந்த்ரா ஐபிஎல் அணிகளின் நிர்வாகிகள் தான் என்றும் குருநாத் மெய்யப்பனும், ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ்குந்த்ராவும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive