Thursday 22 January 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி -வேட்பாளர் அண்ணாதுரை

சென்னை

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி நடக்கிறது. இங்கு அ.தி.மு.க சார்பில் வளர்மதி போட்டியிடுகிறார். இவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார். தி.மு.க வேட்பாளர் ஆனந்த் தனது வேட்பு மனுவை இன்று  தாக்கல் செய்தார். இந்த இரு கட்சிகளும் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன .

பா.ம.க. இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்து விட்டது. மற்ற கட்சிகளின் நிலை குறித்து தெரிய வில்லை. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டணி சார்பில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

நேற்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தே.மு..தி.க தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசிய பிறகு 

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினோம். பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. எங்களது தேசிய ஜனநாயக கூட்டணி ஸ்ரீரங்கத் தில் போட்டியிடும். யார் வேட்பாளர், எந்த கட்சி வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்பது பற்றி மீண்டும் பேச்சு நடத்தி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.என கூறி உள்ளார். 

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்ன்யூனிஸ்ட் கடசி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்து உள்ளது.தனது வேட்பாளராக அண்ணாதுரை என்பவரை அறிவித்து உள்ளது.

 விவசாய    குடும்பத்தை சேர்ந்த இவரது   பெற்றோர்  கக்காளையன் - பாப்பாத்தியம்மாள்.   மனைவி விமலா.   இவருக்கு  பிடல் காஸ்ட்ரோ  என்ற  மகன் உள்ளார்.   அண்ணாதுரை பிளஸ்-2 வரை படித்துள் ளார்.

இவர்  கடந்த  1986-ம் ஆண்டு மாணவர் சங்கத்தில் சேர்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு  கட்சியில்  1988-ல் இணைந்தார்.

1988 முதல் இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலை வராகவும் 1993-ல் இந்திய ஜனநாயக  வாலிபர்  சங்க மாவட்ட தலைவராகவும், கட்சியின் முழுநேர ஊழி யராகவும்,   2001   முதல் 2011 வரை திருச்சி மாநகர செயலாளராகவும், 2015-ல் திருச்சியில்நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் திருச்சி மாநகர் மாவட்டக்குழு செய லாளராக  தேர்வு  செய்யப் பட்டார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive