Thursday 22 January 2015

டெல்லியில் பா.ஜனதா தலைவர் வருண்காந்தி சசிதரூரை சந்தித்தார்

பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான வருண்காந்தி நேற்று மாலையில் டெல்லி லோகி எஸ்டேட்டில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

சசிதரூரை சந்தித்தது பற்றி நிருபர்கள் வருண்காந்தியிடம் கேட்டதற்கு அவர் பதில் ஏதும் அளிக்காமல் சென்று விட்டார்.

பின்னர் வருண்காந்தி தனது டுவிட்டர் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் சசிதரூரை சந்தித்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் அவர்‘ பாராளுமன்ற வெளிவிவகாரத்துறை கமிட்டி அடுத்த கூட்டம் தொடர்பாக 10 நிமிடம் சசிதரூரை சந்தித்து பேசியதாக‘ குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதுகுறித்து பாரதீய ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில்‘ சசிதரூர் வருண்காந்தியை தனது வீட்டுக்கு அழைத்து பேசியது அவரது தந்திரங்களில் இது ஒன்று‘ என தெரிவித்து உள்ளார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive