Thursday 22 January 2015

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும்: அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல்




நியூயார்க்,

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என கோரி நியூயார்க் நீதிமன்றத்தில் சீக்கியர்களுக்கான உரிமைகள் குழு என்ற அமைப்பு உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

சீக்கியர்களுக்கான உரிமைகள் குழு(sfj) என்ற அமைப்பு நியூயார்க்கின் தென் மாவட்டத்தில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது. விரிவாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ்  அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்க வேண்டும். அந்த அமைப்பு பாஷிச கொள்கைகளையும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய கொள்கைகள், தீய மற்றும் வன்முறை பிரச்சாரத்தில்  நம்பிக்கை கொண்டு  இந்தியாவை இந்து நாடாக்க  முயற்சிக்கிறது, ”வீடு திரும்புதல்”  என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களை கட்டாயமாக மதமாற்று பிரச்சாரத்தை செய்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பாபர் மசூதி இடிப்பு மற்றும் பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கையை ஏற்படுத்த தூண்டியதாகவும் 2008 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது கிறிஸ்தவ ஆலயங்களை எரித்ததாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு  தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரிக்கு சம்மன் அனுப்பியுள்ள நீதிமன்றம் இன்னும் 60 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்  என உத்தரவிட்டுள்ளது. 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive