Thursday 22 January 2015

'நேனோ' கார் தயாரிப்பில் மீண்டும் களமிறங்கும் 'டாடா'

கொல்கத்தா, 

டாடா மோட்டார்ஸ் தயாரித்த இந்தியாவின் மிக விலை குறைந்த 'நேனோ' கார்கள் இன்னும் நம்மூர் சாலைகளில் அங்குமிங்குமாக ஊர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில்,  மீண்டும் 'நேனோ' தயாரிப்பில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுபற்றி, டாடா மோட்டர்ஸின் சேல்ஸ் ஹெட் ஆஷிஷ் தார் கூறுகையில், 'தற்போது ஒரு மாதத்திற்கு 2000 முதல் 2500 கார்களை தயாரித்து வருகிறோம். ஆனால், விரைவில் நேனோவில் சில மாற்றங்கள் செய்து மீண்டும் தயாரிக்க இருக்கிறோம். நேனோ மாடல் பெயிலியராகி விட்டதாக பரவலாக பேசப்படுகிறது. அது தவறு. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்னும் நேனோவுக்கு டிமாண்ட் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து நேனோ காரை தயாரிப்போம்.' என்றார். 

கடந்த 2009-ம் ஆண்டு குஜராத் மாநிலம் சானாந்தில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டதுதான் 'நேனோ'. இது ரதன் டாடாவின் கனவுத்திட்டமாகும். மீண்டும் நேனோ தயாரிப்பில் களமிறங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 'பெலிக்கன்' என்ற புதிய ரக காரையும் டிசைன் செய்து வருகிறது. அதுவும், குஜராத் பிளாண்டில் இருந்தே வெளிவருகிறது.

எனினும், நேனோ கார் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. கார் அறிமுகமாகும் போது பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தபோதிலும் அதை பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி செய்ய முடியவில்லை. போதுமான அளவுக்கு விளம்பரமும் செய்யப்படவில்லை. டீலர்கள் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததால் நேனோ கார்களின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. தற்போது இவை சீராக்கப்பட்டு வருகின்றன. நேனோ காருக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கைகள் நடந்து வருவதாக தெரிவித்தார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive