Saturday 24 January 2015

குடியரசு தின விழாவிற்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை

புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார். இந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அழைக்கப்பட்டுள்ளார். இந்திய குடியரசு தினவிழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அழைக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்தியா வரும் ஒபாமா 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

ஒபாமா இந்தியா வருவதையொட்டி டெல்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே டெல்லிக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றது. டெல்லி முழுவதும் பாதுகாப்பிற்காக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியும்,ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கபட வில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் கூறப்படுவதாவது:

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரி, அவருக்கு குடியரசு தின விழாவில் அழைப்பு விடுக்கபடாதது பாரதீய ஜனதா கட்சி அரசு பாரம்பரிய நடைமுறைகளையும் ஒவ்வொன்றாக குறைத்து வருவது வேதனை அளிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் தெரிவிக்கபட்டது.

டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியன ஷீலா தீட்சித்கிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive