Saturday 24 January 2015

ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் தடை செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது: ராணுவ தளபதி

ஸ்ரீநகர்,

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜாமாத் -உத் -தவா அமைப்புக்கு பாகிஸ்தான் தடைவித்துள்ளது நல்ல நடவடிக்கைதான். ஆனால் இந்த நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகளை நாம் அளவிட வேண்டும் என்று ராணுவ லெப்டினட் ஜெனரல் சுப்ரதா ஷா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் இன்று ராணுவ தளபதி ஜெனரல் சுப்ரதா ஷா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 ”பாகிஸ்தான் ஜமாத் உத் தவா அமைப்புக்கு தடை விதித்தது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை. ஆனால் இது எந்த அளவில் தீவிரமான செயல்பாடுகளை காட்டுகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையையொட்டி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

மேலும், கடந்த ஆண்டு பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டதாக கூறிய அவர்,   எல்லைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கு பகுதிக்குள் ஊடுருவதற்காக கிட்டதட்ட 17 தளங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தயாராக இருந்தனர் என்று தகவல்கள் வெளியாகியது. இருப்பினும் அவர்களின் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

குடியரசு தினவிழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பதட்டமான பகுதிகளில் பாராமிலிட்டரி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். என்றும் அவர் தெரிவித்தார்.

 டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறுகையில், 'நாங்கள் ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் செயல்படுகிறோம். ’ஜமாத் உத் தாவா’வின் வங்கிக்கணக்குகளை முடக்கி உள்ளோம். அதன் தலைவரின் வெளிநாட்டுப்பயணத்தை தடை செய்திருக்கிறோம். ஐ.நா. தீர்மானத்தின்படி என்ன தேவையோ அதை செய்வோம்'என்றார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive