Thursday 22 January 2015

அவுராங்காபாத்தில் பன்றி காய்ச்சலால் ஒருவர் பலி

அவுரங்காபாத் ஹிலால் காலனியை சேர்ந்தவர் ஷபீர் ஷூசைன் முஸ்தபா (வயது 45) இவருக்கு கடந்த சில வாரங்களாக கடும் காய்சலாலும் சளித்தொல்லையாலும் அவதிபட்டு வந்தார்.

கடந்த வாரத்தில் அவுராங்காபத்தில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. இந்நிலையில் அவர்  சிகிச்சை பலினின்றி இறந்தார்.

இது குறித்து மருத்துவமனை துறைத்தலைவர் டாக்டர்
டாக்டர் மங்கள் பார்கர் கூறுகையில் முஸ்தபா கடந்த சில வாரங்களாகவே கடும் காய்ச்சலால் அவதிபட்டு வந்தார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனை நடத்தியதில் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. சில நாட்களில் அவருக்கு சிறுநீரக பாதிப்பும் ஏற்பட்டது. 

அதனை தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். எனினும் முஸ்தபா சிகிச்சை பலின்றி இறந்தார். இவ்வாறு 
டாக்டர் மங்கள் பார்கர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive