Thursday 22 January 2015

தொடர் ஏற்றத்தில் பங்கு வர்த்தகம், சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியது

தொடர்ந்து 6-வது வர்த்தக தினமாக இன்று பங்கு வர்த்தகம் காலை ஏற்றம் கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சமான 29,000 புள்ளியை தாண்டியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 8,754.65 புள்ளியை எட்டியது.

இந்திய நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக உள்ளது, நிதி மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இவையனைத்தும் பங்கு வியாபாரத்தின் ஏற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. ஐரோப்பிய மைய வங்கி இந்தவாரத்தில் புதிய ஊக்குவிப்பு சலுகைகளை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இன்றும் மும்பை பங்குச்சந்தையில் பங்கு வர்த்தகம் காலை ஏற்றம் கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சமான 29,000 புள்ளியை தாண்டியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 8,754.65 புள்ளியை எட்டியது

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 124.02 புள்ளிகள் உயர்ந்து 29,012.88 புள்ளிகளாக உள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் மதிப்பு அதிகபட்சமாக 28,958.10 புள்ளிகளுக்கு சென்றது. முன்னதாக தொடர்ச்சியாக ஐந்தாவது வர்த்தக தினத்தில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டதால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,542 புள்ளிகள் உயர்ந்தது. இதற்கிடையே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 8,754.65 புள்ளியை எட்டியது.

தேசிய பங்குச்சந்தையிலும் வர்த்தகம் நன்றாக தொடங்கியது. நிப்டி 25.15 புள்ளிகள் உயர்ந்து 8,754.65 புள்ளியை எட்டியது. நேற்றைய வர்த்தகத்தின்போது நிப்டி அதிகபட்சமாக 8,741.85 புள்ளிகளுக்கு சென்றது. ரிசர்வ் வங்கி திடீரென ரெப்போ ரேட்டை குறைத்ததால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட உற்சாகம் இன்னும் குறையவில்லை. அன்னிய முதலீடு திருப்திகரமாக இருக்கிறது. 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive