Thursday 22 January 2015

லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு: கேரள மந்திரிக்கு வரும் மணியார்டர்கள்

திருவனந்தபுரம்,
கேரள நிதி மந்திரி கே.எம்.மணி மீது, மதுபான பார் உரிமையாளர்களிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவருக்கு புதுமையான முறையில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
கேரளாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரில் பலர், மந்திரி கே.எம்.மணி மீது அதிருப்தி அடைந்து, அவர் மிகவும் ‘ஏழ்மை‘ நிலையில் இருப்பதாக கூறி அவருக்கு பணம் அனுப்பி வருகிறார்கள். ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் வசதி இல்லாததால் மணியார்டர் மூலம், கோட்டயம் மாவட்டம் பாலா என்ற இடத்தில் உள்ள அவரது முகவரிக்கு ரூ.5 முதல் ரூ.500 வரை பணம் அனுப்ப தொடங்கி இருக்கிறார்கள். ஒரு நாளில் மட்டும் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் மணியார்டர் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி வரும் பணத்தை யாரிடம், எப்படி கொடுப்பது? என்று தெரியாமல் அந்த பகுதியைச் சேர்ந்த தபால்காரர்கள் தவித்து வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive