Saturday 24 January 2015

பிரதமர் மோடியின் சுமையை குறைக்க விரும்புகிறேன்-கிரண்பேடி

டெல்லி மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 7-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

 இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மோதுகின்றன. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால் பா.ஜனதா முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடியை களத்தில் இறக்கி உள்ளது.

முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிரண்பேடி டெல்லியில் உள்ள கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்..

தான் நேரிடையாக சென்று பிரச்சாரம் செய்ய உள்ளதாக பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கிரண்பேடி கூறியதாவது:

டெல்லியில் பா.ஜ.க.சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக நிறுத்தபட்டுள்ளேன்.

பா.ஜ.க.வேட்பாளர் என்ற முறையில் புதுடெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கு நானே நேரில் சென்று மக்களை நேரடியாக் சந்தித்து  பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன்.

பிரதமர் மோடி பா.ஜ.க.தலைவர் மட்டும் அல்லாது,நாட்டின் மிகப்பெரிய பொறுப்பான பிரதமர் பதவியும் வகிக்கிறார். அவருக்கு பல்வேறு பிரச்சனைகளும் பல்வேறு சவால்களும் காத்து கொண்டிருக்கின்றன.

இதை கருத்தில் கொண்டு அவரது சுமையை குறைப்பதற்காக நானே நேரில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக கிரண்பேடி தெரிவித்தார்.

நான் கடந்த 40 வருடங்களாக பொதுசேவை செய்து வருகிறேன் என்பதனையும் சுட்டிகாட்டி உள்ளார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive