Wednesday 21 January 2015

ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோயகு, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துபேசினார். கடந்த மாதம் இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து நினைவு கூர்ந்தார். அப்போது இரு நாட்டின் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது குறித்து ரஷிய பாதுகாப்பு துறை அமைச்சர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார். ரஷியாவில் நடக்க இருக்கும் பிரிக்ஸ் 7 மாநாட்டில் மோடி பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநில முன்னாள் டி.ஜி.பி. பிரிஜ்லால் இன்று பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

போலீஸ் பணியில் இருந்தபோது குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய பிரிஜ்லால், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இணைந்து பணியாற்ற விரும்பி இன்று கட்சியில் தன்னை இணைத்துக்கொள்வதாக
அம்மாநில பா.ஜ.க.தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் அகிலேஷ்யாத்வ் 2012-ம் ஆண்டு முதல்-மந்திரியாக பதவியேற்ற பிறகு 1977-ம் ஆண்டை சேர்ந்த பிரிஜ்லால் அப்பதவியில் இருந்து நீக்கபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மாயாவதிக்கு நெருக்கமாக இருந்த காரணத்தால் அவரை டி.ஜி.பி.பதவியில் இருந்து அம்மாநில அரசு நீக்கியது.

மற்றொரு ஐ.பி.எஸ்.அதிகாரியான கியான் சிங்கும் முன்னாள் எம்.எல்.ஏவும் மான ராஜேந்திர சிங் பா.ஜ.க.கட்சியில் இணைந்தது அதன் ஒற்றுமையை காட்டுகிறது என்று ஓம் மாத்தூர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive