Wednesday 21 January 2015

2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி,

2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்திய காடுகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

30 சதவீதம் அதிகரிப்பு
சமீபத்தில் வனத்துறையினர் மேற்கொண்ட புலிகள் கணக்கெடுப்பின் படி உலகில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் புலிகள் இந்தியாவில் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 80 சதவீத புலிகளின் புகைப்படங்கள் வனத்துறையினரிடம் உள்ளது. உலகின் மற்ற நாடுகளில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது மிகவும் நல்ல செய்தியாகும்.

2014-ம் ஆண்டுகணக்கெடுப்பின்படி...

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காடுகளில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்துகிறது. கடந்த 2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்தியாவில் மொத்தம் 1,706 புலிகள் இருந்தன. இந்தக் கணக்கெடுப்பு புலிகள் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் 17 மாநிலங்களில் எடுக்கப்பட்டதாகும்.

2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 2,226 புலிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் கர்நாடகா, உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, அசாம், கேரளா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 64 புலிகள் இறந்துள்ளதாகவும், இதில் தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive