Wednesday 21 January 2015

சிங்கப்பூர் விபத்தில் சுற்றுலா பயணி பலி: தமிழக டிரைவருக்கு ரூ.4 லட்சம் அபராதம்

சிங்கப்பூர், 

சிங்கப்பூரில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தவர், பரமசிவம் பாரதி (வயது 46). தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி சிங்கப்பூரில் லாரியை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டிச்சென்று, ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார்.

இதில், காரில் பயணம் செய்த மலேசிய சுற்றுலாப்பயணி லிம் ஷியாங் ரென் (28) என்பவர் படுகாயம் அடைந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த லிம் ஷியாங் ரென், மலேசிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

இது தொடர்பாக லாரி டிரைவர் பரமசிவம் பாரதி மீது சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது, அவர் தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.அவரது கடந்த கால நன்னடத்தையை நீதிபதி ஜேனட் வாங், கருத்தில் கொண்டு,  8,500 சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.4 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், அவர் 5 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கும் கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive